விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த 4 சீசன்களாக நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது சீசன் cook with comali season 5 நேற்று தொடங்கிய நிலையில், இந்நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் அதில் கலந்துக்கொள்ளவில்லை. இவர் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள அவரின் நிகழ்ச்சியை பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக்வித் கோமாளி நிகழ்ச்சி தனித்துவமான சமையல் நிகழச்சியாகும். இந்த நிகழ்ச்சியல் செஃப்கள் ஆக வெங்கடேஷ் பட், தாமு மற்றும் தொகுப்பாளர் ரக்ஷன் ஆகியோர் கடந்த 4 சீசன்களாக பயணித்து வருகின்றனர். இதில கோமாளிகளாக புகழ், சுனிதா, ஷிவாங்கி, மணிமேகலை என இந்த நிகழ்ச்சி கலகலப்பாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் குக் வித் கோமாளி ஆரம்பித்து சீசன் 5 நேற்று தொடங்கிய நிலையில் இதில் செஃப் வெங்கட் பட் (cook with comali venkatesh bhat) கலந்துக்கொள்ள வில்லை. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விலகியதாக தகவல் வெளிவந்துள்ளது.
வெங்கடேஷ் பட், இந்த நிகழ்ச்சியின் முன்னாள் தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன் உடனான கருத்து வேறுபாடு காரணமாக விலகிவிட்டதாக தகவல் அறியப்படுகிறது. செஃப் தாமுவும் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் மீண்டும் அவர் இந்த நிகழ்ச்சியில் தொடர்வதாக அறிவித்திருந்தார். தற்போது இந்த சீசனில் செஃப் தாமுவுடன், சமையல்கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஸ் புதிய நடுவராக இணைந்துள்ளார்.
இந்நிலையில் வெங்கடேஷ் பட் ரசிகர்கள் உங்களை மிஸ் செய்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தனர். அவரின் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெங்கடேஷ் பட் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் நீங்கள் என்னை மிஸ் செய்வதாக கூறியது, நீங்கள் காட்டும் அன்பு இதற்கெல்லாம் நான் கொடுத்து வைத்துள்ளேன். கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார். நான் என்னைக்கும் உங்களை ஏமாற்ற மாட்டேன் என்று கூறி, உங்களுக்காக இன்று முதல் காலை 8 மணிக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு என்று கூறி அவர் பேசும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.