பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) சீரியல் ஆனது மக்கள் மத்தில் நல்ல வரவேற்பு பெற்ற சீரியல் ஆகும். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் முத்து விஜய் டிவியின் மற்றொரு சீரியலில் இண்ட்ரோ கொடுக்க உள்ளார்.
கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல் சிறிது நாட்களிலேயே மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பழைய சீரியல்களை பின்னுக்கு தள்ளி டிஆர்பியில் முன்னேறி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலின் கதை தான்.
இந்த சீரியலில் ஹீரோவாக இருக்கும் முத்து என்ற கதாபாத்திரம் நிஜத்தில் இருக்கும் பல நல்லவர்களை பிரதிபலிக்கும் விதமாக இருப்பதே சீரியலை மக்கள் விரும்பி பார்க்க முக்கிய காரதணம். முத்துவிற்கு கோபம் வந்தால் அதை மறைத்து சிரித்து நடிக்க தெரியாது. தவறு என்று தோன்றினால் உடனே கோபப்பட்டு அடிப்பார், அதேநேரத்தில் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளும் ஒரு நபர் ஆவார்.
இந்த முத்து என்ற ஹீரோ கதாபாத்திரத்தில் நடிகர் வெற்றி வசந்த் (Vetri Vasanth) நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பாக யூடியூபில் சில குறும்படங்களில் நடித்து வந்தார். இந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது நடித்து வருகிறார். இவரின் முத்து கதாபாத்திரத்திற்கு நிறைய ரசிகர்கள் தற்போது உள்ளனர்.
இந்த நிலையில் இவர் சிறகடிக்க ஆசை சீரியல் தவிர மற்றொரு சீரியலில் அறிமுகமாக உள்ளார். விஜய் தொழைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீ நான் காதல் (Nee Naan Kaadhal)என்ற சீரியலில் சிறப்பு விருந்தினராக வெற்றி வசந்த் நடிக்க உள்ளார். இந்த சீரியலில் வெற்றி வசந்துடன் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் சீரியல் கதாநாயகி மாவும் (Guest Role in Nee Naan Kaadhal) கலந்துக்கொள்ள உள்ளார். இது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: kizhakku vaasal: சீக்கிரம் எண்டுகார்டு போட்ட கிழக்கு வாசல் சீரியல்..! சோகத்தில் ரசிகர்கள்..! |