இந்த காலத்தில் திரைப்படங்களை காட்டிலும் சீரியல்கள் மீது உள்ள ஆர்வம் அதிகமாக உள்ளது. அதிலும் பெண்களுக்கு செல்லவே தேவை இல்லை. சீரியல்கள் என்றால் அப்படி ஒரு பிரியம். தற்போது சீரியல்களில் அதிக பிரபலம் என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் (Siragadikka Aasai Serial) தான்.
இந்த சீரியல் மக்கள் மனதில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. மேலும் மற்ற தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விடவும் இந்த சீரியல் மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலின் பிரபலத்திற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் தான் அதிலும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி கதாபாத்திரங்களில் நடித்து வரும் இருவரும் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் காரணம்.
இந்நிலையில் தான் தற்போது இந்த சீரியலில் கதாநாயகனாக முத்து (Siragadikka Aasai Serial Muthu) என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் நடிகர் வெற்றி வசந்த். இவருடைய எதார்த்தமான நடிப்பு பலருக்கும் பிடித்துள்ளது மேலும் இவருக்கு என்று ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர் நடித்து வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் 300 வது எபிசோடு வெற்றியை தொடர்ந்து லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.
அப்போது அவர் தான் இந்த சீரியலில் இருந்து எப்போது விலகுவேன் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இவர் அளித்த பதில் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த கேள்விக்கு முத்து நான் இப்ப பேசுறதை நீங்க ரெக்கார்டு கூட பண்ணி வச்சுக்கலாம் என்று கூறி விட்டு, நான் இப்போது மட்டுமில்லை எப்போதும் நான் இந்த சீரியலில் இருந்து விலக மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் இந்த சீரியல் இன்னும் எத்தனை வருடங்கள் ஒளிபரப்பானாலும் இந்த சீரியலின் கடைசி எப்பிசோடில் சுபம் என்ற ஒரு வார்த்தை வரும் வரைக்கும் நான் கதாநாயகனாக இருப்பேன்.
இந்த சீரியல் தான் எனக்கு ஒரு மறு வாழ்க்கையை தந்தது. எவ்வளவு பெரிய வாய்ப்புகள் வந்தாலும் இந்த சீரியலை விட்டு போகமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பதில் முத்துவின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழப்பு..! அதிர்ச்சியில் மக்கள்..! |