தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் தான் இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran). இவருடைய இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியான படம் விடுதலை. இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பலரை கவர்ந்தவர் தான் நடிகர் சூரி (Soori). பல வருடங்களாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த இவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த படம் தான் விடுதலை பாகம் 1 (Viduthalai 1). இப்படத்தில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார். இவரின் நடிப்பை பற்றி செல்லவே வேண்டாம். மேலும் இப்படத்தில் இவருடன் பவானி ஸ்ரீ, சேது உள்ளிட்ட பலர் நடத்திருந்தனர். இந்த படம் வலுவான கதைகளத்தை கொண்டு இருந்தது. எனவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்படம் ஒரு திரை விருந்தாகவே இருந்தது.
விடுதலை படம் 2023-ஆண்டின் மார்ச் மாதத்தில் வெளியானது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. விடுதலை முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளும் தொடங்கப்பட்டது. இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கூட இப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தான் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி நடைபெறவுள்ள ரோட்டர்டாம் (IFFR) என்னும் சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் என்னும் பிரிவில் விடுதலை திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் தேர்வாகியுள்ளது. இதனை படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: டன்கி திரைப்படத்தின் வசூல்..! |