Homeசினிமாதளபதி 69 படத்தில் மீண்டும் இணைகிறார்களா விஜய் திரிஷா..! வெளியான சூப்பர் அப்டேட்..!

தளபதி 69 படத்தில் மீண்டும் இணைகிறார்களா விஜய் திரிஷா..! வெளியான சூப்பர் அப்டேட்..!

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு தனது அடுத்த படமான கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படம் இவருடைய 68-வது படம் ஆகும். இந்த படத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கோட் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் விஜய்யின் அடுத்த படமான தளபதி 69 குறித்த தகவல்கள் வெளியாகிவருகிறது. அதன் படி இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க போவதாக (Thalapathy 69 Movie Director) சொல்லப்படுகிறது. எனினும் இப்படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தான் தற்போது இந்த தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகை குறித்து தகவல்கள் (Thalapathy 69 Movie Heroine) வெளியாகியுள்ளது. இந்த படம் தளபதி விஜய்கு இறுதி படமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாக தான் உள்ளது.

இந்த படத்தின் கதை எவ்வாறு இருக்கும், விஜய் இப்படத்தில் இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிப்பார் என பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துக்கொண்டு தான் உள்ளது. அதில் முக்கியமான ஒரு கேள்வி தான் இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்க உள்ளார் என்பது, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க சமந்தா, திரிஷா மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியோரின் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 69 Movie Heroine

நம்மில் பலருக்கும் பிடித்த ஜோடி தான் விஜய் மற்றும் திரிஷா. இதற்கு முன்னர் 5 படங்களில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அதே போல் சமந்தாவும் 3 படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மிருணாள் தாக்கூர் நடித்தார் என்றால் இது புது ஜோடியாக இருக்கும். ஆனால் இவர்களில் யார் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் தெரிய நாம் கொஞ்சம் பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இதையும் படியுங்கள்: Jeans படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தவர் இவரா? வாய்ப்பை தவறவிட்ட முன்னணி நடிகர்… யார் தெரியுமா?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular