தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். அந்த கட்சின் பெயரை (Political Party Name) விஜய் அவரின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஆவார். இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. Vijay அரசியலுக்கு வருவார் என பல வருடங்களாகவே அனைவராலும் பேசப்பட்டு வந்தது. அந்த கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் விஜய்யின் ரசிகர் மன்றம் மானது விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு தமிழக மக்களுக்கு உதவி வந்தது.
விஜய் மக்கள் இயக்கமானது பல வருடங்களாகவே மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தது. மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள், சமூக சேவைகள் செய்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இருப்பினும் மக்களுக்கு முழுமையாக உதவ ஒரு தன்னார்வ அமைப்பால் முடியாது. எனவே Vijay அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் கூறிவந்தனர்.
இந்த நிலையில் சமீப காலங்களாக விஜய்யும் அவரின் ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்றார் போலவே பல செயல்கள் ஈடுப்பட்டு வந்தார். அரசியலில் ஏற்படும் குற்றங்கள் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை படத்தில் நடித்து வந்தார். அதுமட்டுமின்றி கடந்த வருடம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து நிவாரண பொருட்களை கொடுத்தார். இதன் காரணங்களால் விஜய் அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என்ற வதந்திகள் பரவி வந்தன.
விஜய் அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என்ற வதந்தியை உண்மையாக மாற்றும் வகையில் இன்று (02.02.2024) விஜய் புதிய அரசியல் கட்சி (Vijay political party) ஒன்றை தொடங்கியுள்ளார். தமிழக வெற்றி கழகம் (Tamizhaga Vetri kazhagam) என்ற கட்சியின் பெயரையும் அவர் வெளியிட்டுள்ளார். இது சுருக்கமாக TVK என அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக விஜய்யின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மக்களுக்கு சேவை செய்வதற்காக புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் படங்களை முடித்து விட்டு முழுமையாக மக்களுக்கு சேவை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
#தமிழகவெற்றிகழகம் #TVKVijay https://t.co/Szf7Kdnyvr
— Vijay (@actorvijay) February 2, 2024