Homeசெய்திகள்ப்ளூ சட்டையை விளாசிய விஜய் ஆண்டனி..! சம்பவம் என்ன தெரியுமா?

ப்ளூ சட்டையை விளாசிய விஜய் ஆண்டனி..! சம்பவம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் வெளிவரும் திரைப்படங்களை விமர்சனம் செய்பவர் தான் ப்ளூ சட்டை மாறன். இவர் படங்களை விமர்சிப்பது மட்டுமல்லாமல் நடிகர்களை விமர்சிப்பதும் வழக்கம் தான். இவர் விமர்சனத்திற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டமும், ப்ளு சட்டையை விமர்சிப்பதற்கு ஒரு தனி கூட்டமும் உள்ளது. அந்த வகையில் இவரின் விமர்சனங்கை கேட்டு அவ்வப்போது நடிகர்கள் டென்ஷன் ஆகி அவரை ஒருவழி செய்துவிடுவார்கள். அதுபோல அவர் (Vijay Antony Romeo movie Sattai Maran review) சமீபத்தில் விமர்சனம் செய்யப்பட்ட படத்தை தொடர்ந்து தற்போது ப்ளூ சட்டை மாறனை விளாசி பதிவிட்டுள்ளார் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி.

இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தான் (Vijay Antony Romeo movie) ரோமியோ. இந்த திரைப்படத்தில் மிர்ணாலினி ரவி, ஷா ரா, யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பரத் தனசேகர் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தை ப்ளூ சட்டை மாறன் வழக்கபோல விமர்சனம் செய்துள்ளார். ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தில் விஜய் ஆண்டனி இசையமைக்கவில்லை, ஆனாலும் எடிட்டிங் அவர்தான் செய்திருப்பார் போல. மற்ற நடிகர்கள் நடித்த நல்ல காட்சிகளை எல்லாம் எடிட் செய்துவிட்டு இவரின் முகத்தை க்ளோஸ் அப்பில் வைத்து எடிட் செய்திருப்பார் போல் தெரிகிறது. மொத்தத்தில் படம் ராெம்ப டல்லாக போகிறது என விமர்சனம் செய்திருந்தார்.

அதற்கு பதிலடி காெடுக்கும் விதமாக நடிகர் விஜய் ஆண்டனி பதிவு (Vijay Antony Attack Blue Sattai Maran) ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக்கொல்லும் திரு புளு சட்டை மாறன் போன்ற சிலருக்கும், அவர்களை சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம் போய் பாருங்க புரியும்.

ரோமியேவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: நடிகர் கமலை விளாசிய ப்ளூ சட்டை மாறன்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular