தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) என்னும் படத்தில் நடித்து வருகிறார். GOAT என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, சினேகா, லைலா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. நடிகர் விஜய் இந்த படத்திற்கு ரூபாய் 200 கோடி சம்பளமாக கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இந்த படத்தை முடித்த பிறகு அடுத்த படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்த படத்துடம் சினிமாவை விட்டு விலகிவடுவார் என்று அவர் கூறியிருந்தார். சில நாட்களுக்கு முன்பு தான் விஜய் தனது கட்சி மற்றும் அதனை பெயரையும் அறிவித்தார். இவர் அடுத்த நடிக்கும் படத்தில் மட்டும் தான் நடிப்பார் என்று தகவல் வெளியாயியுள்ளது.
விஜய் அடுத்து நடிக்கும் படத்திற்கு பிறகு விஜய் சினிமாவில் இருந்து முழுவதும் விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் அவருடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சி தீவிரமாக களம் இறங்கப் போகிறது என்றும் கூறியிருந்தார்.
இவை ஒருபுறம் இருக்க தான் விஜய் கடைசியாக நடிக்கும் படத்தை (Vijay Salary in Next Movie) ஆர்ஆர்ஆர் படத் தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தை இயக்க ஹெச். வினோத் உட்பட 3 இயக்குனர்களிடம் கதை சொன்னதாகவும் அதில் ஹெச். வினோத் இயக்கும் படத்தில் தான் விஜய் அடுத்து நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தான் இந்த படத்திற்கு விஜய்க்கு வழங்கவுள்ள சம்பளம் (Vijay Salary in Thalapathy 69)பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு நடிகர் விஜய்க்கு சம்பளமாக ரூபாய் 250 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்: மேடையில் கண்ணீருடன் பேசிய பிரதமர் மோடி..! நடந்தது என்ன? |