Homeசினிமாதமிழ் திரையுலகில் 50 கோடி வசூல் செய்த முதல் படம் யாருடைய படம் தெரியுமா? கேட்டா...

தமிழ் திரையுலகில் 50 கோடி வசூல் செய்த முதல் படம் யாருடைய படம் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!

தமிழ் திரையுலகை பொருத்தவரையில் சமீப காலங்களில் வெளியாகும் பல படங்கள் 100 கோடி முதல் 700 கோடி வரை சர்வசாதாரணமாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆனால் முன்பெல்லாம் அதிக அளவிலான படங்கள் வெளியானாலும் அதில் கோடிகளில் வசூல் செய்யும் படங்களை விறல் விட்டு எண்ணிவிடலாம் அந்த அளவிற்கு தான் இருக்கும்.

சில படங்கள் மட்டும் தான் கோடிகளில் வசூல் செய்யும். அந்த வகையில் தான் முதல் முதலில் 50 கோடி வசூல் செய்த படம் பற்றிய தகவல் (Ghilli Budget And Collection) தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் ஒரு முன்னணி நடிகரின் படம் ஆகும். இப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முதலில் ரூ.50 கோடி வசூல் செய்த படம் என்ற பெயரையும் பெற்றது.

இந்த தகவலின் படி இருபது வருடங்களுக்கு முன்பே 50 கோடி வசூல் செய்த படம் இயக்குனர் தரணி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி திரைப்படம் தான். இந்த படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஒக்கடு என்னும் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

இப்படத்தில் கதாநாயகனாக விஜய் மற்றும் கதாநாயகியாக த்ரிஷா நடித்திருப்பார். மேலும் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாதிரத்தில் நடித்து இருப்பார். இவர்களோடு இன்னும் பல பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது. மேலும் இப்படத்தின் திரைக்கதை, வசனம், பாடல், ஆக்ஷன் காட்சிகள் என ஒட்டுமொத்த படத்தையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

வெறும் 8 கோடி பட்ஜெட்டில் (Ghilli Movie Budget) உருவான இந்த படம் ரூ.50 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது (Ghilli Box Office Collection Worldwide in Tamil). இப்போது உள்ள காலகட்டத்தில் இது பெரிய வசூல் தொகையாக இல்லாவிட்டாலும் அப்போதைய காலகட்டத்தில் ரூ.50 கோடி வசூல் என்பது தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட வசூலாக இருந்தது.

Ghilli Box Office Collection Worldwide in Tamil

இந்த படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவில் ரூ.50 கோடி வசூல் செய்த முதல் நடிகர் என்ற பெருமையை நடிகர் விஜய் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது 20 வருடங்கள் கழித்து இப்படம் மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ரீ ரிலீஸ் போது (Ghilli Movie Re Release Collection) கூட இந்த படம் வெளியான மூன்று நாட்களில் 70 கோடி வசூல் செய்துள்ளது.

இதையும் படியுங்கள்: கல்லூரி படம் ஷோபனாவை நினைவிருக்கா? கல்லூரியின் நினைவுகளை பகிர்ந்த தமன்னா..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular