Homeசினிமாரீ-என்ட்ரி கொடுக்கும் வினுஷா..! புது சீரியலின் பெயர் என்ன தெரியுமா?

ரீ-என்ட்ரி கொடுக்கும் வினுஷா..! புது சீரியலின் பெயர் என்ன தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ஒளிபரப்பாகும் போது அதிக அளவிலான ரசிகர்களை கொண்டு ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்தது இந்த சீரியலில் நடித்த வினுஷா தேவி (Vinusha Devi) தற்போது மீண்டும் விஜய் டிவியில் ஒரு புதிய சீரியலில் (Vijay Tv New Serial) நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முதலில் கதாநாயகியாக நடித்தவர் ரேஷ்ணி. அவர் அந்த சீரியலில் இருந்து விலகிய பிறகு அவரின் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் வினுஷா தேவி (Bharathi Kannamma Vinusha).

பாரதி கண்ணம்மா முதல் பாகம் முடிவுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகமாக பாரதி கண்ணம்மா 2 என்ற சீரியலும் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. அந்த சீரியலிலும் வினுஷா ஹீரோயினாக நடித்தார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறவில்லை என்பதால் சில மாதங்களிலேயே முடிக்கப்பட்டது.

அதன் பிறகு வினுஷா தேவி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக கழந்துக்கொண்டார். அதிலும் அவருக்கு அதிகமான வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் காரணமாக நான்காம் வாரத்திலேயே பிக் பாஸில் (Vinusha Devi in Bigg Boss 7) இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் அவர் மீண்டும் விஜய் டிவியில் ஒரு புதிய சீரியலில் அறிமுகமாக உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள பனிவிழும் மலர்வனம் (Panivizhum Malarvanam Serial Update) என்ற தொடரில் தான் வினுஷா தேவி நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இந்த சீரியலில் ஈரமான ரோஜாவே சீரியல் மூலமாக பிரபலமான ஆன சித்தார்த் குமரன் ஹீரோபாக நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த சீரியலின் டீசர் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

Panivizhum Malarvanam Serial Update
மேலும் படிக்க: இதய திருடன் பட நடிகை.. காம்னா நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular