இந்த வருடத்திற்கான IPL தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசன் ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் ஆகும். இது கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முக்கிய மற்றும் சிறப்பான வீரர்கள் இருந்தாலும் பலரது விருப்பத்திற்குரிய வீரராக இருப்பவர் எம்.எஸ். தோனி.
இவர் ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை (MS Dhoni Records) படைத்துள்ளார். இவருடைய பல சாதனைகள் இன்றளவும் முறியடிக்கப்படாமல் தான் உள்ளது. இந்நிலையில தான் தற்போது பெங்களூரு அணியின் முக்கிய வீரரான விராட் கோலி தற்போது தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரின் 10 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி வெளிப்படுத்தினார். இதன் மூலம் RCB அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சாதனை (Virat Kohli New Record) ஒன்றை படைத்துள்ளார்.
விராட் கோலி IPL தொடரில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி விராட் கோலி 4-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். தோனி இதுவரை 252 போட்டிகளில் 232 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். அதை 240 போட்டிகளில் 241 சிக்ஸ் அடித்து கோலி தோனியின் ரொகார்டை முறியடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: ஜூன் 1 ஆம் தேதி வரை வெளியிட கூடாது… தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு..! |