விவோ நிறுவனம் தனது V50 மொபைலின் சிறப்பு பதிப்பான Vivo V50 Elite Edition-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ₹41,999 விலையில் விற்பனைக்கு வந்துள்ளதுடன், இலவசமாக ₹1,899 மதிப்புள்ள Vivo TWS 3e இயர்பட்ஸ்களும் வழங்கப்படுகிறது. ரோஸ் ரெட் வண்ணத்தில் மின்னும் இந்த ஸ்மார்ட் ஃபோன், 6000mAh பேட்டரி, 90W ஃபாஷ் சார்ஜிங், Zeiss-ன் 50MP டிரிபிள் கேமரா, 6.78’’ AMOLED டிஸ்ப்ளே, மற்றும் Snapdragon 7 Gen 3 சிப்செட்டை கொண்டுள்ளது.
இந்த மொபைல் IP68/IP69 தரச்சான்றுகளை பெற்றதாக இருப்பதோடு, 3 ஆண்டுகள் Android அப்டேட்களும் 4 ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது. TWS 3e இயர்பட்ஸ்கள் 30dB வரை நொய்ஸ் கேன்சலேஷன், 42 மணி நேர பேட்டரி மற்றும் 88ms லேட்டென்ஸி கொண்டுள்ளன. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலதிக சலுகையாக வங்கி கேஷ்பேக், ஜீரோ டவுன்பேமென்ட் EMI மற்றும் ₹499-க்கு V-Shield பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்பமும், அழகும் கலந்து விளங்கும் Vivo V50 Elite எடிஷன் தற்போது Flipkart, Amazon, Vivo இணையதளம் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் கிடைக்கிறது. அதிக சேமிப்பு, அழுத்தமான பெர்ஃபார்மன்ஸ், மற்றும் பிரீமியம் காம்போவை விரும்பும் பயனாளர்களுக்கு இது ஒரு ஸ்மார்ட் தேர்வாக இருக்கலாம்.