Homeசமையல் குறிப்புகள்இந்த வெயிலுக்கு ஜில்லுனு தர்பூசணி சர்பத் செய்வது எப்படி..! 5 நிமிடம் போதும்..!

இந்த வெயிலுக்கு ஜில்லுனு தர்பூசணி சர்பத் செய்வது எப்படி..! 5 நிமிடம் போதும்..!

வருடம் முழுவதும் பல காலநிலை மாறுபாடுகள் ஏற்பட்டாலும் பலராலும் வெறுக்கப்படும் காலம் என்றால் அது கோடைகாலம் தான். இந்த வருடத்தில் கோடைக்காலம் தொடங்கிவிட்டது. தொடக்கத்திலேயே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலை குறைக்க நம்மால் எதுவும் செய்யமுடியாது. ஆனால் இந்த வெயில் மூலம் நம் உடலில் ஏற்படும் பாதிப்புகளில இருந்து நம்மை பாதுக்காத்துக்கொள்ளலாம்.

இது போன்ற கோடை காலத்தில் நாம் அனைவரும் நம் உடலை முடிந்த வரையில் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை அதிகமாக எடுத்தக்கொள்ள வேண்டும். இதற்காக இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த வரிசையில் முக்கிய இடத்தை பிடிப்பது தான் தர்பூசணி பழம். இந்த பலர் பலருக்கும் பிடிக்கும். எனினும் சிலருக்கு பிடிப்பது இல்லை. அதுபோல உள்ளவர்களுக்கு அந்த தர்பூசணியில் சர்பத் தயார் செய்து கொடுத்தால் நிச்சயம் பருகுவர். இந்த தர்பூசணி சர்பத் எவ்வாறு செய்ய வேண்டும் (How To Make Watermelon Milk Sharbat in Tamil) என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

தர்பூசணி சர்பத் செய்முறை (Watermelon Milk Sharbat recipe in Tamil)

தேவையானப் பொருட்கள்

  • தர்பூசணி – 1/2 கப்
  • தேன் – சுவைக்கு ஏற்ப
  • எலுமிச்சை பழம் – 1
  • புதினா – 1 கைப்பிடி
  • பால் – 1/2 கப்
  • சப்ஜா விதை – 2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்

  • தர்பூசணியை முதலில் வெட்டி அதை ஒரு பிளெண்டரில் போட்டு சாறு எடுக்கவும். அதனை தனியே வைத்துக்கொள்ளவும்.
  • அதன் பிறகு மற்றொரு பாத்திரத்தில் வெட்டிய எலுமிச்சை பழம், புதினா இலைகள், தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ளவும்.
  • இப்போது அதனுடன் தர்பூசணி சாறை சேர்க்கவும். பின்னர் பாலை அதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த கலவையில் ஐஸ் கட்டி மற்றும் ஊறவைத்த சப்ஜா விதைகளை சேர்த்தால் சுவையான தர்பூசணி சர்பத் 5 நிமிடத்தில் தயார்.
How To Make Watermelon Milk Sharbat in Tamil

நாம் இப்பதிவில் தர்பூசணி சர்பத் செய்வது எப்படி (Tharpoosani Sarbath Seivathu Eppadi) என்று பார்த்துள்ளோம். இந்த தர்பூசணி சர்பத் இந்த கோடைகாலத்தில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். எனவே இதனை செய்து மக்கள் பருகலாம்.

இதையும் படியுங்கள்: இந்த வெயிலுக்கு 5 நிமிடத்தில் சுவையான ராகி கூழ் செய்யலாம் வாங்க..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular