பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள். பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உதாரணமாக நம் வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ பாம்பை கண்டால் பதறி ஓடி வந்து விடுவோம். சில சமயம் அந்த பாம்பை பிடிப்பதற்கு பாம்பு பிடிப்பவர்களை அழைத்து பிடித்துவிடுவோம். அந்த பாம்பை பிடித்த பிறகு தான் நமக்கு நிம்மதி ஏற்படும். அந்த அளவிற்கு பாம்பு என்றால் அனைவருக்கும் பயம்.
நமக்கு சில சமயம் தோன்றும் இந்த பாம்பு பிடிப்பவர்கள் மட்டும் எவ்வாறு இவ்வளவு தைரியமாக பாம்பை பிடிக்கிறார்கள் என்று. காரணம் அவர்கள் முறையான பயிற்சி பெற்று பாம்பு பிடிக்கிறார்கள். இதனால் பாம்பை கண்டால் அதன் அருகில் செல்லாமல் பாம்பு பிடிப்பவர்களை தொடர்பு கொண்டு அதனை பிடித்து விடலாம்.
இதில் ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால், எவ்வளவு விஷமான பாம்பாக இருந்தால் அதன் முன் தைரியமாக நின்று சண்டையிடும் ஒரு விலங்கு தான் கீரி. பொதுவாக ஒரு வீட்டில் குழந்தைகள் சண்டியிட்டுக்கொண்டால் ஏன் பாம்பு, கீரி போல சண்டை போட்டு (Mongoose Snake Fight in tamil) கொள்கிறீர்கள் என்று கூறுவார்கள். ஏனென்றால் கீரிக்கு பாம்பு என்றார் ஆகவே ஆகாது. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை நடந்தால் அதில் அதிகளவு வெற்றி பெறுவது கீரியாக தான் இருக்கும்.
எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் தன்னுடைய விஷத்தின் மூலம் கொல்லும் பாம்பு. அனால் கீரியை ஏன் கொல்ல முடியவில்லை. பாம்பின் விஷம் கீரியை ஒன்றும் செய்யாமல் இருக்க காரணம் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பாம்பின் விஷம் கீரியை ஒன்றும் செய்யாமல் இருக்க காரணம், கீரியின் உடலில் அசிட்டைல்கோலின் என்ற ஒரு வேதிப்பொருள் சுரக்கிறது. இந்த வேதிப்பொருள் தான் பாம்பின் விஷத்தை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் கீரியின் தோல் மிகவும் கடினமான தோல், அவ்வளவு எளிதாக பாம்பின் பற்கள் கீரியின் உடலில் பதியாது. கீரியின் உடலில் இருக்கும் க்ளைக்கோபுரோட்டின், பாம்பின் விஷத்தில் இருக்கும் புரோட்டினை சமன் செய்து விடுவதால், பாம்பின் விஷத்தால் கீரிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை.
மேலும் படிக்க: Erumbu Palangal: உங்கள் வீட்டில் கருப்பு எறும்பு வருகிறதா? ஜோதிடம் சொல்லும் எறும்பு சாஸ்திரம்..! |