மக்கள் பலரும் வருடம் முழுவதும் எதிர்பார்க்கும் நிகழ்வுகளில் முக்கியமான ஒருநாள் தான் மகா சிவராத்திரி. இந்த நாள் வருடம் தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் மகா சிவராத்திரி இன்று (08.03.2024) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் அனைவரும் இரவு முழுவதும் கண் விழித்து சிவனை பிராத்தனை செய்வர். இவ்வாறு செய்வதன் மூலம் சிவனுடைய முழு அனுக்கிரகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மாதம் தோறும் சிவராத்திரி வருகிறது எனினும் இந்த மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி சிறப்பு வாய்ந்தது. இதை தான் நாம் மகா சிவராத்திரி என்கிறோம். அதுவும் இந்த வருடம் வெள்ளிக்கிழமை சுக்கிரவார பிரதோஷத்தின் இணைந்து மகா சிவராத்திரி வருவது மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த சிவராத்திரி அன்று பக்தர்கள் பலரும் சிவன் கோவில்களுக்கு சென்று இரவு முழுவதும் சிவனை வழிபாடு செய்வர். இதுபோல மகா சிவராத்திரி அன்று சிவன் கோவிலுக்கு செல்வது ஒரு வருடம் முழுவதும் சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கு சமம் என்று கூறுகின்றனர். இந்த மகா சிவராத்திரியை பலரும் பல விதமாக கடைப்பபிடிப்பர்.
ஆனால் அதிகபட்சம் மக்கள் அனைவரும் கோவில்களுக்கு சென்று வழிபடுவது தான் வழக்கம். ஆனால் சிலரால் கோவில்களுக்கு செல்ல முடியாமல் இருக்கலாம். இதுபோன்று கோவில்களுக்கு சென்று சிவனை வழிபாடு செய்ய முடியாமல் இருப்பவர்கள் தங்கள் வீடுகளிலேயே இரவு முழுவதும் சிவன் வழிபாடு செய்யலாம்.
அதுமட்டுமின்றி பலருக்கு இரவு முழுவதும் வழிபாடு செய்ய முடியவில்லை என்றால் இரவு ஒரு மணி நேரம் மட்டும் சிவனை வழிபாடு (Mahashivratri Seiya Vendiyavai) செய்யலாம். மேலும் வழிபாட்டை நிறைவு செய்யும் செய்யும் போது பால், தயிர், நெய், தேன் போன்றவற்றைக்கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து பின்னர் விளக்கு ஏற்றி வழிபாடு முடிக்க வேண்டும். இவ்வாறு இரவில் கண் விழித்து வழிபாடு செய்ய முடியாதவர்கள் செய்யலாம் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.
இதையும் படியுங்கள்: நீதா அம்பானியின் நெக்லஸ் விலை எத்தனை கோடி தெரியுமா? |