Homeசெய்திகள்திடீரென 2வது முறையாக முடங்கிய வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராம்…

திடீரென 2வது முறையாக முடங்கிய வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராம்…

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் அத்தியாவசிய பயன்பாடாக மாறியுள்ளது மெபைல். இன்றைய காலகட்டத்தில் அதிகமான மக்கள் தங்கள் பொழுதுபோக்கிற்காகவும், மற்றத்தேவைகளுக்காவும் சமுக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக மொபைலில் நாம் அதிகம் பயன்படுத்துபவை வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் தான். இந்த நிலையில் நேற்றைய தினம் சிறிது நேரம் இந்த செயலிகள் முடங்கியதால் பயனாளர்கள் பாதிப்புக்கினர்.

பெரும்பாளான மக்கள் அவர்களின் தினசரி வேலைகளை முடித்துவிட்டு இரவு நேரங்களில் போன் பயன்படுத்துவது வலக்கம். எனவே இரவு நேரங்களில் மக்களின் சமுக வலைதளங்களின் பயன்பாடு மிகவும் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று இரவு (04.04.24) 11.45 மணி அளவில் WhatsApp மற்றும் Instagram சிறிது நேரம் முடங்கியது.

வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் (WhatsApp and Instagram were disabled) சிறிது நேரம் முடங்கியதால் மக்கள் இந்த இரண்டு வலைதளங்களில் உள்நுழைய முயற்சித்த போது, தற்போது சேவை கிடைக்கவில்லை என்று காட்டியது. இதனால் இவற்றை பயன்படுத்தி வந்த ஆயிரக்கணக்கான பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

வாட்ஸ் அப் செயலி முடங்கியதாக இந்தியாவில் 20,000-க்கும் மேற்பட்ட பயனாளர்கள், இங்கிலாந்தில் 46,000 பயனாளர்கள், அமெரிக்காவில் 12,000-க்கும் மேற்பட்ட பயனாளர்கள் புகாரளித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் செயலி முடங்கியதாக அமெரிக்காவில் 4,000 -க்கும் அதிகமான பயனாளர்கள் புகார் தெரிவித்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

WhatsApp and Instagram

செயலிகள் முடிங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் சரிசெய்யப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த வருடத்தில் மெட்டாவிற்கு (Meta) சொந்தமான செயலிகள் முடங்குவது இது இரண்டாவது முறையாகும். கடந்த மார்ச் மாதத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் முடிங்கயிது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் DEO, Clerk வேலை அறிவிப்பு..! உடனே விண்ணப்பியுங்கள்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular