தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த வெயிலின் தாக்கத்தை மக்களால் சமாளிக்க முடியவில்லை என்றே தான் கூறவேண்டும்.
சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் தங்களை வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக குளிர்ச்சியான பழங்கள், திரவ ஆகாரங்களை எடுத்து வருகின்றன. அந்த வகையில் மதுப்பானப்பிரியர்கள் கூலிங்கான பீரை குடித்து வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்கின்றனர். அந்த வகையில் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் சில நேரங்களில் ஜில் பீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த கோடை காலத்தில் ஜில் பீருக்காக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது என்று தான் கூற வேண்டும். டாஸ்மாக் கடைகளில் தினமும், 60,000 பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை, தற்போது 1 லட்சம் பெட்டிகளாக தாண்டியிருக்கிறது என்று டாஸ்மாக் கடைகள் தெரிவித்துள்ளன.
தற்போது டாஸ்மாக் கடைகளில் புதிய வகையான கோதுமை பீர் (New Beer Launch TN) விற்பனை செய்யப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது 35 வகையான பீர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் டாஸ்மாக் கடைகளில் இந்த வீட் பீர் (New Wheat Beer Launch TN) விற்பனை செய்யப்பட உள்ளது. இது மதுப்பிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.
இந்த கோதுமை பீர் 100 சதவீதம் கோதுமையில் தயாரிக்கப்பட்ட பீர் ஆகும். அந்த வகையில் இந்த கோதுமை பீர். டாஸ்மாக் கடைகளில் வீட் பீர் என்ற பெயரில் அறிமுகமாகப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த வீட் பீர் ரூ.190 வரை விற்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.