லைஃப்ஸ்டைல்

சென்னையில் மொத்த விற்பனை சந்தைகள் (Wholesale Markets in Chennai)

தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு பண்டிகை வந்தாலே புதிய டிரெஸ், அதற்கு மேட்சாக மற்ற பொருட்கள் வாங்குவது என Shopping கலைகட்டும். அதும் நம் சிங்கார சென்னை என்றால் நாம் சொல்லவா வேண்டும். அங்கு கூட்டம் கலைகட்டும் அல்லவா. முன்பெல்லாம் சென்னையில் ஷாப்பிங் என்றாலே நம் நினைவுக்கு வருவது தியாகராய நகர் மட்டுமே, ஆனால் இப்பொழுது எல்லா இடங்களிலும் கடைகள் அதிகமாகிவிட்டன. ஆனாலும் சென்னையில் குறைந்த விலையிலும் தரமான பொருட்களும் கிடைக்கும் ஒரு சில முக்கிய Wholesale Markets பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

சென்னை மொத்த விலை சந்தைகள் (Chennai Wholesale Markets)

தியாகராய நகர் (T- Nagar)

முதலில் நாம் பார்க்க உள்ளது T- Nagar

என்று அழைக்கப்படும் ரங்கநாதன் தெருதான். இங்கு அதிக அளவில் கடைகள் உள்ளன. இங்கு அனைத்து வகையான பொருட்களும் கிடைக்கும், இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை என கூறலாம். அந்த அளவிற்கு அனைத்து வகையான பொருட்களும் மிகக்குறைந்த விலையில் கிடைக்கும். இங்கு குறைந்த விலையில் பொருட்கள் விற்கப்படுவதாலே ஏராளமான மக்கள் இன்றும் இங்கு குவிந்த வண்ணமே உள்ளனர்.

பாண்டி பஜார் (Pondy Bazzar)

பாண்டிபஜார், சவுந்தரபாண்டியனார் அங்காடி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பாண்டிபஜார் சென்னை மக்களிடடையே நல்ல பிரபலம். ஏராளமான கடைகள் இப்பகுதியிலும் அமைந்துள்ளன. இங்கு அதிகளவிலான மக்கள் மாலை நேரத்தில் வருகின்றனர். சென்னை மக்கள் ஷாப்பிங் செய்ய தேர்வு செய்யும் இடங்களில் பாண்டிபஜார் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

மயிலாப்பூர் (Mylapore Market)

சென்னை மக்கள் ஷாப்பிங் செய்ய தேர்வு செய்யும் இடங்களில் ஒன்று மயிலாப்பூர். இங்கு உள்ள கபாலீஸ்வரர் கோவில் மிகவும் பிரபலம், அங்கு விற்கப்படும் திண்பண்டங்களுக்கு ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்த திண்பண்டங்ளுக்காகவே பல கிலோமீட்டர் தூரம் பயணித்து வந்து வாங்கி செல்கின்றனர். இங்கும் பலவகையான கடைகள் உள்ளன. எனவே பல வகையான பொருட்கள் விற்கப்படுகிறது.

வண்ணாரப்பேட்டை (vannarapettai Market)

சென்னையில் துணிகள் விற்பனைக்கு பெயர் பெற்ற இவ்ண்ணாரப்பேட்டையில் துணிக்கடைகளுக்கு பஞ்சமே இல்லை. இங்கு ஏராளமான துணிக்கடைகள் இருப்பதால் மொத்த விற்பனையாளர்கள் முதற்கொண்டு இங்கு வந்து துணிகளை வாங்கி செல்லும் அளவுக்கு அதிகளவிலான துணிக்கடைகள் இருக்கின்றன.

கோயம்பேடு (Koyambedu Market)

சென்னை மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவருக்கும் கோயம்பேடு மார்க்கெட் பற்றி தெரியும். இங்கு அனைத்து வகையான பொருட்களும் கிடைக்கும், மொத்த வியாபாரம் இங்கு அதிக அளவில் நடைபெறுகிறது. மேலும் காய்கறி மற்றும் பூ மார்க்கெட்டுகளும் இங்கு அதிக அளவில் உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். எனவே இது ஒரு பிரபலமான Wholesale Market ஆக உள்ளது.

குரோம்பேட்டை (Chromepet Market)

முன்பெல்லாம் குரோம்பேட்டையில் அதிகளவில் கடைகள் இல்லை. ஆனால் இப்போது அவ்வாறு இல்லை. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு கடைகள் வந்துவிட்டன. சாலையின் இருபுறங்களில் கடைகள் அமைந்து உள்ளதால் மக்கள் கூட்டமும் பேருந்துகளின் கூட்டமும் சேர்ந்து எந்த நேரமும் அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

புரசைவாக்கம் (Purasawalkam Market)

புரசைவாக்கத்தில் அதிகளவில் கோவில்கள் கடைகள் இருப்பதால் இந்த பகுதிகளிலும் அதிகளவிலான மக்கள் கூட்டம் உள்ளது. இந்த பகுதிகளில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் போலீசார் எப்போதும் கண்காணிப்பு பணியில் இருப்பர்.

சென்னையில் உள்ள இதுபோன்ற மார்கெட்களில் சாதாரண நாட்களிலேயே அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்படும். வரும் 12-ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது, இந்நிலையில் அனைத்து மார்கெட்களிலும் கூட்டம் அதிகமாகி வருகிறது. எனவே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மொத்த சந்தைகள் என்றால் என்ன?

மொத்த சந்தைகள் என்பது, நாம் பயன்படுத்தும் துணிகள், நகைகள், பூக்கள், காய்கறி, பழங்கள் போன்ற அனைத்து விதமான பொருட்களும் குறைந்த விலையில் ஒரே இடத்தில் கிடைக்கும் இடங்கள் மொத்த சந்தைகள் ஆகும்.

சென்னையில் உள்ள மொத்த விலை சந்தைகள்?

தியாகராய நகர் (T- Nagar)
புரசைவாக்கம் (Purasawalkam Market)
குரோம்பேட்டை (Chromepet Market)
கோயம்பேடு (Koyambedu Market)
வண்ணாரப்பேட்டை (vannarapettai Market)
மயிலாப்பூர் (Mylapore Market)
பாண்டி பஜார் (Pondy Bazzar)

Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago