இந்த வருடம் உலகக்கோப்பை அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைப்பெற்றுவருகிறது. இந்த தொடரில் ஆரம்பம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை நடைப்பெற்ற 5 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது.
இந்நிலையில் முன்னாள் இந்திய அணியின் சிறந்த வீரரான சச்சின் டென்டுல்கர் பல சாதனைகளை படைத்துள்ளார். அந்த சாதனைகளில் ஒன்றான ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் அடித்து ரெகார்ட் செய்து உள்ளார். இப்போது வரை இந்த ரெகார்டை யாராலும் சமன் செய்யவோ, முறியடிக்கவோ இல்லை.
ஆனால் தற்போது இந்த சாதனையை Virat Kohli முறியடிப்பாரா? என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு உலகக் கோப்பையில் நன்றாக விளையாடிவரும் கோலி அக்டோபர் 19-ம் தேதி நடைபெற்றப் போட்டியில் அதிரடியாக விளையாடி தனது சதத்தை பதிவு செய்தார். அந்த சதம் ஆனது அவருக்கு 48th Century ஆகும்.
இப்போட்டிக்கு பிறகு சச்சினின் ரெகார்டை சமன் செய்ய ஒரே ஒரு சதம் மட்டுமே மீதம் உள்ளது. எனவே அக்டோபர் 22-ம் தேதி நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரானப் போட்டியில் சதம் அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்வார் என்ற பலரின் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய கோலி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். இப்போட்டியில் 104 பந்துகளில் 95 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கோலியின் விக்கெட் பறிபோனது. இது Kohli மற்றும் கிரிகெட் ரசிகர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதனால் சச்சினின் ரெகார்டை சமன் செய்வதில் தாமதம் ஆனது. இதனால் நாளை நடைப்பெற உள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து (IND vs ENG) அணிகளுக்கு இடையேயான போட்டி ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்ப்பார்ப்புகளிடையே தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா என்பதை விட கிங் கோலி சதம் அடித்து Sachin Tendulkar ரெகார்ட்-ஐ சமன் செய்வாரா என்பது தான் கிரிக்கெட் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பாக உள்ளது.