ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் உலகம் முழுவதும் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் தற்போது இந்த தொடரில் இந்திய அணியும் விளையாடவுள்ளது.
இந்த ஆண்டிற்கான FIH மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை 2023 எதிர்பார்ப்பை தூண்டிவிட்ட நிலையில், சிலியின் சாண்டியாகோவில் இன்று தொடங்கவுள்ளது. முதல் போட்டியாக இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு நடைபெறுகிறது. இப்போட்டிக்கு இந்தியா அணி தனது விறுவிறுப்பான தொடக்க ஆட்டத்திற்குத் தயாராகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று போட்டி நடைபெறவுள்ளது.
இதற்கு முன்பு 2022-ம் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல் இந்த ஆண்டின் தங்கள் முத்திரையைப் பதிக்க ஆர்வத்துடன், கடந்த ஆண்டின் ரன்னர்-அன ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் அதுபோல அவர்களின் முதல் எதிரிகளான கருதப்படும் கனடா போன்ற அணிகளை உள்ளடக்கி, இன்று பூல் சியில் இந்தியா தனது பயணத்தைத் தொடங்க தயாராக உள்ளது இந்திய அணி.
கனடாவுக்கு எதிரான இப்போட்டியில் இந்தியா அணி ஆரம்பத்திலேயே வெற்றி பெறும் நோக்கத்தை கொண்டது. கனடாவுடனான முந்தைய மூன்று ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ஜப்பானின் நடைபெற்ற மகளிர் ஜூனியர் ஆசியக் கோப்பை 2023 கோப்பையை இந்தியா வெற்றிகரமாக கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது. இது அவர்களுக்கு மேலும் உந்துதலாக இருக்கும்.
இதுகுறித்து இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ப்ரீத்தி அவர்கள் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாகவே நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார், அவர் கூறியதாவது “நாங்கள் உறுதியுடனும் கவனத்துடனும் போட்டியில் நுழைகிறோம். எங்கள் அணியின் தயாரிப்பு தீவிரமாக உள்ளது, மேலும் அதை களத்தில் எங்கள் செயல்திறனாக மாற்ற நாங்கள் ஆர்வமாக உள்ளோம். தொடக்க ஆட்டத்தில் கனடாவுக்கு எதிராக விளையாடுவது எங்கள் பிரச்சாரத்திற்கான வேகத்தை அமைக்க ஒரு வாய்ப்பாகும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் துஷார் காண்ட்கர் கூறியதாவது, “எங்கள் வீரர்கள் கடுமையாக பயிற்சி பெற்றுள்ளனர், மேலும் வரும் சவால்களுக்கு மனதளவில் தயாராக உள்ளனர். நாங்கள் ஒவ்வொரு எதிரியையும் மதிக்கிறோம். கனடாவுக்கு எதிராக வலுவான தொடக்கத்தை எதிர்நோக்குகிறோம்” என்று கூறியுள்ளார்.
இந்திய அணியானது கனடாவுக்குப் பிறகு, நவம்பர் 30-ம் தேதி ஜெர்மனிக்கு எதிராக விளையாடவுள்ளது. அதன் பிறகு டிசம்பர் 2-ம் தேதி பெல்ஜியத்திற்கு எதிராக விளையாடவுள்ளது. இந்த தொடரின் காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள், டிசம்பர் மாதம் 6, 8 தேதிகளிலும் இறுதிப்போட்டி 10-ம் தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா அணி தனது முதல் FIH ஹாக்கி மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை பட்டத்தை உறுதி செய்வதையே இலக்காகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய அணி கனடாவை இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கவுள்ளது.