லைஃப்ஸ்டைல்

World Health day in Tamil: உலக சுகாதார தினம் ஏன் கொண்டாடப்படுகிறது..!

உலகம் முழுவதும் வருடாவருடம் அனுசரிக்கப்படும் முக்கிய தினங்களில் ஒன்று தான் இந்த உலக சுகாதார தினம். இந்த World Health Day என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த நாளானது 1948-ம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டு 1950-ம் ஆண்டு முதல் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்று முதல் உலக நலவாழ்வு மையத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருட்களை மையமாகக் கொண்டு இந்த உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகின்றது.

உலக சுகாதார தினம் (World Health day)

உலக சுகாதார தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் வருடாவருடம் ஏதேனும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தான் இந்த வருடமும் உலக சுகாதார தினம் வரும் (7.04.2024) அன்று அனுசரிக்கப்படவுள்ளது. மேலும் இந்த சுகாரார தினத்தில் நாம் அனைவரும் சுகாதார மேம்பாட்டையும் உறுதி செய்ய வேண்டும். அதற்கான சில வழிமுறைகளை இப்பதிவில் பார்க்கலாம்.

சுகாதார வழிமுறைகள்

சுகாதாரம் என்றுவுடன் நம்மில் பலருக்கு நினைவில் வருவது என்றால் அது நம்மை சுற்றியுள்ள பொருட்களை சுத்தம் மற்றும் சுகாதாரமாக வைத்திருப்பது தான். ஆனால் அவற்றையும் தாண்டி பல முக்கியமான விசயங்கள் உள்ளது. அவற்றில் முக்கியமாக சிலவற்றினை இப்போது பார்கலாம். இந்த காலகட்டத்தில் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தால் அதிக அளவில் வளர்ச்சி இருந்தாலும் அதை விட அதிகமாக நம் நாடு மாசுபாடு அடைகிறது. எனவே அவற்றை பார்க்கலாம்.

நீர் மாசுபாடு

  • இன்றைய காலகட்டத்தில் அதிக பிரச்சனையை ஏற்படுத்துவது என்றால் அது நீர் மாசுபாடு தான். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
  • இந்த நீர் மாசுபாடு காரணமாக பல விதமான நோய்களும் வருகிறது. இதன் காரணமாக காலரா மற்றும் அதிக அளவில் தோள் நோய்களும் வருகிறது. இதனால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
  • மேலும் பலருக்கும் பெரிய பிரச்சையாக உள்ள குழந்தை பேரிண்மைக்கும் முக்கிய காரணமாக இந்த நீர் மாசுபாடு தான் பார்க்கப்படுகிறது. தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மற்றும் அந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் வேதிப்பொருட்கள் கலந்த நீர் தான் அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமாக உள்ளது.
  • இந்த பிரச்சைனையில் இருந்து நம்மை காத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாக உள்ளது.

நிலம் மாசுபாடு

  • நிலம் மாசுபாடு என்பது பல வருடங்களுக்கு முன்பே தொடங்கிய ஒன்றாகதான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரமாக இருப்பது பிளாஸ்டிக் தான். இதனால் தான் அதிக அளவில் நிலமானது மாசுபாடு அடைகிறது.
  • பிளாஸ்டிக்கிற்கு பிறகு பார்த்தால் நிலம் மாசுபாடு அடைய காரணம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தான். இதனால் நிலமானது மிகவும் அதிகமாக மாசுபடுகிறது.
  • அதுமட்டுமின்றி நம்முடைய தேவைக்காக மண் வளத்தை சுரண்டுகிறோம். இதனால் மண் வளம் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் அனைத்தும் தான் இயற்கை சீற்றத்திற்கு வழிவகுக்கிறது. எனவே இதனை உடனடியாக தவிர்க்கும் சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். எனவே நாம் அனைவரும் இதுபோன்ற செயல்களில் இருந்து நிலத்தை பாதுகாக்க வேண்டும்.

காற்று மாசுபாடு

  • நாம் உயிர்வாழ முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக இருப்பது தான் காற்று. காற்றை சுவாசிப்பதால் தான் நாம் உயிர் வாழ்கிறோம். ஆனால் நாம் சுவாசிக்கும் இந்த காற்றானது மனிதர்களால் தான் அதிக அளவில் மாசுபடுகிறது. ஆம், நாம் பயன்படுத்தும் வாகனத்தில் இருந்து வெளிப்படும் புகை மற்றும் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் புகை போன்றவை காற்றை அசுத்தமாக்குகிறது.
  • நாம் மாசுபடுத்தும் காற்றால நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை பற்றி நாம் தொரிந்துகொள்வதில்லை. நாம் இது போன்ற மாசு அடைந்த காற்றை சுவாசிப்பதால் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்மந்தமான நோய்கள் ஏற்படுகின்றன.

ஒலி மாசுபாடு

  • உடல் நிலையில் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவது இந்த ஒலி மாசுபாடு தான். இதனால் தான் பலர் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஒலி மாசுபாடு என்பது வாகனங்கள் போன்றவை மூலம் எழுப்படும் அதிகபட்ச ஒலியால் தான் இது போன்ற மாசு பாடுகள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
  • மேலும் வாகனங்கள் மற்றம் ஒலிபெருக்கிகள், தொழிற்சாலைகளில் இருந்து வரும் சத்தத்தால் ஒலியானது அதிக அளவில் மாசுபடுகிறது. இதனால் அதிக அளவிலான தலைவலி, மன பதற்றம், தூக்கமின்மை மற்றும் அதிக பட்சமாக மன அழுத்தம் கூட ஏற்படுகிறது.

கதிரியக்க மாசுபாடு

  • கதிரியக்க மாசுபாடு என்பது பொதுவாக அணுக்கரு மருத்துவத் துறை, கதிரிக்கப் பொருட்களைக் கையாளும் ஆய்வுத்துறை, பயிர்த்துறை முதலிய துறைகளில் பணியில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வு ஆகும். மேலும் இதுப்போன்ற துறைகளில் மாசுபடுதல் என்றால் அது கதிரியக்க மாசுபடு தான்.
  • கதிரியக்க மாசு என்பது பல காரணங்களால் ஏற்படுகிறது. கதிரியக்க வாயுக்கள் மற்றும் திரவங்கள் வெளிப்படுவதால் இந்த மாசுபாடு ஏற்படலாம். இதற்கு எடுத்துக்காட்டாக அணு மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு ரேடியோநியூக்லைடு தற்செயலாக கசிந்தால் அது கதிரியக்க மாசுபாடு ஆகும்.

மாசு பாதுகாப்பு

  • இவை போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டுமானால், அதற்கு இந்த மாசுபாடுகளை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு முதல் கட்ட நடவடிக்கையாக நாம் முதலில் பிளாஸ்டிக் உபயோகத்தை குறைக்க வேண்டும்.
  • அதன் பிறகு வாகனங்கள் பயன்படுத்துதலை குறைக்க வேண்டும். முக்கியமாக மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். நாம் வீணாக்கும் மழை நீரை சேகரித்து வைக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்பது மிகவும் நல்லது.
  • சுகாதாரம் என்பது சுத்தமாக இருப்பது மட்டும் இல்லை மனதளவில் அனைவரும் ஆரோக்கியமாக உள்ளார்களா என்பதை பொறுத்தும் தான் அமைகிறது. இவற்றுடம் சேர்த்து முக்கியமான ஒன்று நம் வீடு சுத்தமாக இருந்தால் தான் நம் நாடும் சுத்தமாக இருக்கும் என்பதை உணர்ந்து நாம் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட்டால் நம் நாட்டினை மாசுபாட்டிலிருந்தும் அனைத்து வகையான பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கலாம்.
இதையும் படியுங்கள்: Kolaru Pathigam Lyrics in Tamil: வாழ்வின் அனைத்து குறைகளையும் தீர்க்கும் கோளறு பதிகம்..!

உலக சுகாதார தின கருப்பொருள் (World Health Day Theme)

அனைத்து வருடமும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்த இந்த உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.

வருடம் (Year) கருப்பொருள் (Theme)
world health day theme 1995இளம் பிள்ளை வாதத்தை உலகின்றே விரட்டுவோம்.
world health day theme 1996தரமான வாழ்விற்கு நலமான நகரம்.
world health day theme 1997முகிழ்த்துவரும் தொற்றுநோய்கள் தவிர்ப்போம்
world health day theme 1998பாதுகாப்பான தாய்மை
world health day theme 1999சுறுசுறுப்பான முதுமை இயங்கல் வேறுபாடானதே.
world health day theme 2000பாதுகாப்பான குருதி ஆரம்பிக்கட்டும்.
world health day theme 2001மனவளம்: விலக்கி வைப்பதை விலக்குவோம். அக்கறையுடன் கவனிப்போம்.
world health day theme 2002நலவாழ்வை நோக்கி நகர்வோம்.
world health day theme 2003குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க சுற்றுச் சூழலை நலம் பேணுவோம்
world health day theme 2004சாலை வீதி பாதுகாப்பு
world health day theme 2005ஒவ்வொரு தாயும் சேயும் தேவை என்பதை உணர்வோம்
world health day theme 2006ஒன்றுபட்டு நலவாழ்விற்காக உழைப்போம்
world health day theme 2007அனைத்துலக நலவாழ்வுப் பாதுகாப்பு.
world health day theme 2009அவசர காலங்களில் சுகாதார வசதிகள்
world health day theme 2010நகரமயமாக்கல் மற்றும் ஆரோக்கியம்
world health day theme 2011நல்ல ஆரோக்கியம் பல ஆண்டுகளாக வாழ்க்கையை சேர்க்கிறது
world health day theme 2012
world health day theme 2013உயர் இரத்த அழுத்தம்
world health day theme 2014vector-borne diseases
world health day theme 2015உணவு பாதுகாப்பு
world health day theme 2016நீரிழிவு நோயை வெல்லுங்கள்
world health day theme 2017மன அழுத்தம்
world health day theme 2018Universal Health Coverage: Everyone, Everywhere
world health day theme 2019Universal Health Coverage: Everyone, Everywhere
world health day theme 2020Support nurses and midwives
world health day theme 2021ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குதல்
world health day theme 2022Our planet, our health
world health day theme 2023Health for All
world health day theme 2024Nurses and Midwives

இப்பதிவில் நாம் உலக சுகாதார மையம் மூலம் வருடாவருடம் அனுசரிக்கப்படும் உலக சுகாதார தினம் (Ulaga Sugathara dhinam) பற்றியும் மற்றும் அதன் கருப்பொருள் ஆகியவற்றினை பற்றி பார்த்துள்ளோம். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இதையும் படியுங்கள்: Bharathidasan Biography in Tamil: பாரதிதாசன் வாழ்க்கை குறிப்பு..!

உலக சுகாதார தினம் – FAQ

1. உலக சுகாதார தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

ஏப்ரல் மாதம் 7-ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.

2. எந்த வருடம் முதல் உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது?

1950-ம் ஆண்டு முதல் உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.

3. உலக சுகாதார தினத்தின் இந்த ஆண்டிற்கான கருப்பொருள் என்ன?

Nurses and Midwives

Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago