தொழில்நுட்பம் காரணமாக உலகெங்கிலும் பயன்படுத்தும் எக்ஸ் வலைதளம் (ஏப்ரல் 11) சுமார் அரை மணி நேரம் முடங்கியது. இதனால் அதன் பயனாளர்கள் கடும் (x problem today) அவதியடைந்தனர்.
முன்பு டிவிட்டர் என அழைக்கப்பட்ட எக்ஸ் வலைதளம், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக உள்ளது. இந்த எக்ஸ் வலைதளத்தின் தற்போதைய உரிமையாளராக எலன் மஸ்க் உள்ளார். உலக பணக்காரர் வரிசையில் உள்ள எலன் மஸ்க் உரிமையாளராக உள்ளளார்.
சமீப காலமாக இந்த எக்ஸ் வலைதளம் பல தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல நேரங்களில் முடங்கியுள்ளது. இதனால் இதன் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எக்ஸ் வலைதளம் இவ்வாறாக பல நேரங்களில் முடங்குவதால் பயனாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியா உட்பட பல நாடுகளில் காலை 10.41 துவங்கி இந்த வலைதளம் சுமார் அரை மணி நேரம் செயல்படாமல் (x valai thalam mudakkam) இருந்ததாக மற்ற சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வந்தது. இந்த செய்தி தொடர்பாக டவுன்டிடெக்கர் நடத்திய ஆய்வில் எக்ஸ் வலைதளத்தை பயன்படுத்தும் மொத்த சதவீதத்தில் 58 சதவீதம் பேருக்கு இன்று எக்ஸ் வலைதளம் பயன்படுத்த முடியாமல் போனதாக தகவல் தெரிவித்துள்ளது.
இதில் 26 சதவீத பயனாளர்களுக்கு சர்வெர் பிரச்சனையும், 16 சதவீத பயனாளர்களுக்கு ஆப் பயன்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் எதனால் (x technology issue) இது போன்று ஆனது என தெரியவில்லை. எக்ஸ் வலைதளம் முடங்குவது இது முதல் முறை இல்லை என்றும் இது போல பலமுறை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: X -ன் புதிய அப்டேட்… இனி வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம்… |