HomeAutomobilesYamaha Fascino 125 Fi Hybrid: டூ இன் ஒன் டூ வீலர் பற்றி தெரியுமா?

Yamaha Fascino 125 Fi Hybrid: டூ இன் ஒன் டூ வீலர் பற்றி தெரியுமா?

Yamaha Fascino 125 Fi Hybrid பற்றி இந்த பதிவில் பதிவிட்டுள்ளாம். உலகில் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புதிய புதிய மாடல்களில் பைக்குகள் கார்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது யமஹா நிறுவனத்தின் புதிய மாடல் பைக் பற்றி இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

டெல்லியில் உள்ள பாரத் மஹால் என்ற இடத்தில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் கலந்து கொண்டு அவர்களின் வாகனங்களை காட்சிப்படுத்தி வருகின்றன. இந்த கண்காட்சியானது ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தில் உள்ள பல கலைஞர்களின் மிக முக்கியமான கண்காட்சி ஆகும்.

இந்த கண்காட்சியில் ஆட்டோமொபைல் தொடர்பான அனைத்து தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எல்லாம் இந்த கண்காட்சியில் அவர்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றன. இந்த கண்காட்சியில் யமஹா (Yamaha) நிறுவனம் அதன் வாகனங்களை காட்சிப்படுத்தி வருகிறது.

இந்த எக்ஸ்போ கண்காட்சியில் யமஹா நிறுவனம் சார்பாக சுமார் 400 சதுர மீட்டர் பரப்பளவில் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஒரு பைக் ஈர்த்துள்ளது. இந்த பைக் ஆனது ஒரே நேரத்தில் பெட்ரோலில் ஓடும், பேட்டரியில் ஓடும். இது ஒரு டூ இன் ஒன் டூ வீலர் ஆகும். இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

யமஹா ஃபேசினோ 125 எஃப்ஐ ஹைபிரிட் (Yamaha Fascino 125 Fi Hybrid)

டெல்லியில் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி உள்ளன. அதேபோல் யமஹா நிறுவனம் அதன் தயாரிப்புகளை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளது. அங்கு யமஹா நிறுவனம் அதன் ஸ்கூட்டர் முதல் பெரிய பைக்குகள் வரை அனைத்து விதமான வாகனங்களையும் காட்சியில் மக்களின் பார்வைக்கு வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக அங்கு உள்ள வாகனங்களில் அதிகமாக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அது Yamaha நிறுவனத்தின் மிக முக்கியமான டூவீலர் ஆன யமஹா ஃபேசினோ 125 எஃப்ஐ ஹைபிரிட் (Yamaha Fascino 125 Fi Hybrid) தான். இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையாகி வருகிறது ஸ்கூட்டர் தான். இந்த ஸ்கூட்டரின் தனித்துவம் என்னவென்றால் இது பெட்ரோல் மற்றும் பேட்டரி இரண்டிலும் ஓடக்கூடியது ஆகும்.

ஃபேசினோ 125 எஃப்ஐ ஹைபிரிட் சிறப்பம்சங்கள்

இந்த ஃபேசினோ 125 எஃப்ஐ ஹைபிரிட் ஸ்கூட்டர் ஆனது முன்பே இந்தியாவில் விற்பனையில் இருந்தாலும். தற்போது இது புதிய மாற்றங்களை கொண்டுள்ளது. இந்த Scooter ஆனது பெட்ரோல் மற்றும் பேட்டரி இவை இரண்டிலும் ஓடும் திறன் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இது மக்களிடையே அதிக கவனத்தை பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரின் பவரை பொருத்தவரை 8.2 பிஎஸ் பவர் தான் கொண்டுள்ளது.

Yamaha Fascino 125 Fi Hybrid

ஸ்கூட்டர் மைலேஜ்

பொதுவாக இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டருக்கு 65.75 கிலோமீட்டர் வரை செல்லும் மைலேஜ் (Fascino 125 Fi Mileage) கொண்டுள்ளது. ஸ்கூட்டரில் உள்ள ஹைபிரிட் தொழில்நுட்பம் தான் இந்த மைலேஜ் -க்கான முக்கிய காரணம். ஸ்கூட்டரில் பெட்ரோல் இன்ஜின் உடன் Hybrid Electric Motor பொருத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே இந்த ஃபேசினோ ஸ்கூட்டர் 16% கூடுதல் மைலேஜ் கொடுக்கிறது.

Hybrid Electric Motor தொழில்நுட்பம் காரணமாக இந்த ஸ்கூட்டரின் டார்க் திறனும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் ஸ்கூட்டரில் இருக்கும் டார்க் திறனானது 9.7 என்எம் ஆகும். ஆனால் இந்த ஹைபிரிட் தொழில்நுட்பத்தால் ஸ்கூட்டரினட டார்க் திறன் 10.3 என்எம் ஆகா மாறுகிறது. இது ஸ்கூட்ரின் டார்க் திறனை 30 சதவீதம் வரை அதிகப்படுத்தியுள்ளது. அதிக மைலேஜ் மற்றும் டார்க் திறன் காரணமாக இந்த ஸ்கூட்டர் அதிக கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: Royal Enfield Bullet 350: செம சர்ப்ரைஸ் இதற்கு தான் இத்தனை நாளா வெயிட்டிங்..!

ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் சிஸ்டம்

இந்த யமஹா ஃபேசினோ 125 எஃப்ஐ ஹைபிரிட் ஸ்சுட்டரில் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேஷன் சிஸ்டம் (Smart Motor Generator System) பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் போது சத்தம் ஏற்படாது. மேலும் சிக்னலில் நிற்கும் போது இந்த ஸ்கூட்டர் தானாக ஆஃப் ஆகும் திறனும். கிரீன் சிக்னல் விழுந்த பிறகு மீண்டும் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய ஆக்சிலேட்டர் (Auxiliary) கொடுத்தால் போதும் ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகும். இதன் காரணமாகவும் இந்த Scooter அதிக மைலேஜ் கொடுக்கும்.

Fascino 125 Fi Hybrid Scooter -ல் 190 மீமி டிஸ்க் பிரேக் (Disc brake) அல்லது டிரம் பிரேக் (Drum brake) ஆகிய பிரேக்கிங் வசதிகள் உள்ளது. இது சிபிஎஸ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் இந்த ஸ்கூட்டரில் தேலும் சில சிறப்பம்சங்களை பொருத்தப்பட்டுள்ளன. டெயில் லைட், எல்இடி ஹெட்லைட், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, மற்றும் சீட்டுக்கு அடியில் உள்ள ஸ்டோரேஜ் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் உள்ளன. ஸ்கூட்டரின் முன்பக்கம் 12 இன்ச் அலாய் வீல் (Alloy wheel) மற்றும் பின்பக்கம் 10 இன்ச் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது.

Fascino Fi Hybrid Scooter

இந்த Fascino Scooter ஆனது 5 வகைகள் மற்றும் 14 வண்ணங்களில் கிடைக்கிறது. டார்க் மேட் ப்ளூ, மெட்டாலிக் பிளாக், சியான் ப்ளூ, சுவேவ் காப்பர், யெல்லோ காக்டெய்ல், விவிட் ரெட் மற்றும் மேட் ப்ளூ ஆகிய நிறங்களும் இந்த இந்த ஸ்கூட்டர்கள் இருக்கும்.

இந்த Scooter தற்போது விற்பனையாகி வருகிறது. இதன் மார்க் விலையானது ரூபாய் 79,600 முதல் ரூபாய் 92,530 வரை (Fascino 125 Fi Hybrid Price) ஆகும். இந்த ஸ்கூட்டர் ஆனது பெட்ரோல் மற்றும் பேட்டரி இரண்டிலும் ஓடும் என்பதால் மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இது பிரபலமான பேட்டரி ஸ்கூட்டராக மாறி வருகிறது. இந்த ஸ்கூட்டரை யமஹா நிறுவனம் கண்காட்சியில் வைத்திருப்பதால் மக்கள் அதிக அளவில் இந்த ஸ்கூட்டலை பார்த்து செல்கின்றனர். இதன் காரணமாக எதிர்காலத்தில் Fascino 125 Fi Hybrid Scooter விற்பனை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: Yamaha R15 V4: யமஹானா சும்மாவா..! அப்போ தெரியல இப்பதான் தெரியுது..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular