இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது T-20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியானது அனுபவமுள்ள வீரர்களான கோலி, ரோஹித், பாண்டியா போன்ற வீரர்கள் விளையாடவில்லை. இளம் வீரர்களை கொண்டு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்தியா அணி விளையாடியது.
இப்போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி Bowling-ஐ தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி நன்றாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது.
இந்நிலையில் ஆரம்ப வீரர்களாக ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் விளையாடினர். ஆரம்பம் முதலே நன்றாக விளையாடிய இவர்கள் இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர். புதிய பந்திலேயே அதிக ரன்களை அடிக்க வேண்டும் என்று விளையாடிய ஜெய்ஸ்வால் ஆரம்பத்தில் இருந்தே நன்றாக விளையாடினார்.
இப்போட்டியின் 4-வது ஓவரை ஷான் அபார்ட் வீசினார். இந்த ஓவரில் அதிரடியாக விளையாடிய Yashasvi Jaiswal ஓவரின் முதல் 3 பந்துகளில் ஹார்டிக் பவுண்டரிகளை விளாசினார். 4 மற்றும் 5-வது பந்தில் 2 சிக்ஸர்களை அடித்தார். இதன் மூலம் ஒரு ஓவரில் 24 ரன்களை அடித்தார். இவருடைய அபார ஆட்டத்தால் பவர் பிளே முடிவில் இந்திய அணி 77 ரன்களை அடித்து இருந்தது.
இந்த போட்டியில் மொத்தமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 25 பந்துகள் விளையாடி 53 ரன்களை (9 பவுன்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்) குவித்தார். மேலும் இவர் 212 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். இதன் மூலம் T-20 கிரிகெட் போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.
இவர் மட்டுமின்றி இந்தியாவின் மற்ற வீரர்களான ருதுராஜ் 58 ரன்களும், இஷான் கிஷன் 52 ரன்களும், ரிங்கு சிங் 31 ரன்களும் அடித்தனர். இதனால் இந்திய அணி 235 ரன்களை எடுத்தது.
இதன் பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய வீரர்களான ரவி பிஷ்னாய் 3 விக்கெட் மற்றும் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இப்போட்டியின் முடிவில், இந்திய அணி 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.