கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் தான் சச்சின் டெண்டுல்கர். இவர் பல வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடிய வீரர் ஆவார். பல போட்டிகளில் இந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார். மேலும் பல விதமான சாதனைகளையும் புரிந்துள்ளார். இன்றுவரை எத்தனை வீரர்கள் வந்தாலும் இவரது பல சாதனைகளை இன்றளவும் முறியடிக்க முடியவில்லை என்றுதான் கூறவேண்டும்.
இவை ஒருபுறம் இருக்க தற்போது இளம் வீரர் ஒருவர் சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். தற்போது ரஞ்சி கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விதர்பாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் தான் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனையை இந்திய வீரர் சர்ஃபராஸ் கானின் இளைய சகோதரரான முஷீர் கான் தான் செய்துள்ளார். இவருக்கு தற்போது 19 வயது மட்டுமே ஆகிறது. இவர் மும்பையின் இரண்டாவது இன்னிங்ஸில் 255 பந்துகளில் சதம் அடித்தார்.
மும்பையின் வான்கடே மைதானத்தில் கடந்த மார்ச் 10-ம் தேதி ரஞ்சி கோப்பையின் இறுதிப்போட்டி தொடங்கியது. இப்போட்டியில் விதர்பா அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. எனவே மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணியானது முதல் இன்னிங்சில் மொத்தம் 224 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு விளையாடிய விதர்பா அணி தனது முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
அதன் பிறகு தனது 2-வது இன்னிங்க்ஸை மும்பை அணி தொடங்கியது. இந்த போட்டியில் மும்பை தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த போட்டியில் மும்பை அணியில் ரஹானே 73 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 95 ரன்களும், ஷம்ஸ் முலானி 42 ரன்களும் குவித்தனர். இதில் குறிப்பாக இந்திய வீரர் சர்ஃபராஸ் கானின் இளைய சகோதரர் முஷீர் கான் (Indian Player Musheer Khan) 136 ரன்கள் எடுத்தார்.
இந்த போட்டியில் அடித்த சதத்தின் மூலம் இவர் சச்சின் டெண்டுல்கரின் 29 வருட சாதனையை தற்போது முறியடித்துள்ளார். 1994-ம் ஆண்டு மும்பை அணிக்காக சச்சின் விளையாடினார். அப்போது அவருக்கு வயது 21 மட்டுமே, அப்போது அவர் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்தார். இந்நிலையில் தான் தற்போது ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் 19 வயதான முஷீர் கான் (Musheer Khan) சதமடித்துள்ளார்.
இந்த சதத்தின் மூலம் மூலம் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த மும்பையின் இளம் வீரர் என்ற பெருமையை முஷீர் கான் பெற்றுள்ளார். மேலும் இவர் சச்சினின் 29 வருட சாதனையையும் (Musheer Khan Breaks Sachin Record) முறியடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: 1300 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்..! எந்த மாவட்டத்தில் உள்ளது தெரியுமா? |