கடந்த சில வருடங்களாகவே 90ஸ் கிட்ஸ்கள் பலர் வயதாகிவிட்டது ஆனால் திருமணம் இன்னும் நடைபெறவில்லை என்று புலம்பி வருகின்றனர். மேலும் இவர்களுக்காகவே பல மீம்ஸ்களும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது ஒரு நகைச்சுவையான நிகழ்வு நடைபெற்றுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னங்குறிச்சி என்னும் பகுதியில் காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் ஒரு புகாரை (Valibar Pugar in Salem) அளித்துள்ளார். அந்த புகாரில் அந்த இளைஞர் தற்போது தனக்கு 25 வயது ஆகிறது என்றும் எனினும் தன் பெற்றோர்கள் தனக்கு திருமணம் செய்துவைக்க மறுக்கின்றனர் என்றும் அந்த புகாரில் அவர் கூறியிருந்தார்.
இந்த புகார் கடிதத்தை பார்த்த போலீஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமாகவும் இருந்தது. அதன் பிறகு போலீஸ் அதிகாரிகள் அந்த இளைஞரின் பெற்றோரை காவல் நிலையத்திற்கு அழைத்தனர். அதன் பிறகு அவர்கள் அந்த இளைஞரின் பெற்றோரிடம் இது குறித்து விசாரித்தனர். ஏன் உங்கள் மகனுக்கு திருமணம் செய்துவைக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு அந்த இளைஞரின் பெற்றோர் அவர் பொறுப்பாக இருப்பது இல்லை என்றும், எந்த வேலைக்கும் செல்வது இல்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் தொடர்ந்து பேசிய அவர்கள் இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்தால் வேளைக்கு செல்கிறேன் என்று அந்த இளைஞர் கூறியதாகவும், அதனால் அவர்கள் இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்ததாகவும் ஆனாலும் அவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இதனை கேட்ட போலீசார் அந்த இளைஞரிடம் நீங்கள் முதலில் ஒரு வேளைக்கு செல்ல வேண்டும் அதன் பின்னர் உங்கள் பெற்றோரே உங்களுக்கு திருமணம் செய்து வைப்பார்கள் என்றும் கூறியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்திய ஆப்கள்..! கூகுளுக்கு கண்டனம்..! |