பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. இது போல ஒரு நிகழ்வு தான் புதுசேரியில் நடைபெற்று மொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. இந்நிலையில் தான் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் ஒருவனின் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீனில் வெளியானார்.
ஆனால் வெளிவந்த சில நாட்களிலேயே நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 9 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த நிகழ்வு அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவமானது கடந்த ஜனவரி மாதம் நடந்தது. அப்போது அங்குள்ள கோயில் திருவிழாவில் தோழிகளுடன் கலந்து கொண்டு, மாலை சிறுமி வீடு திரும்பிய சிறுமியை வழிமறித்து அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போது அந்த இளைஞரை அங்கிருந்த மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அதோடு அந்த சிறுமியை பொதுமக்கள் மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து, புதுவை காவல் நிலைய போலீசார் அந்த இளைஞர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அதோடு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் (Udhagai School Girl Rape Case) தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பில் (Udhagai School Girl Case Judgement) 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த அஜித் குமாருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: Justice For Aarthi: புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு நடந்தது என்ன? |