Youtuber Bhuvan Bam: யூடிப்பில் தற்போது அனைவரும் பொழுதுபோக்கிற்காக வீடியோக்கள் பதிவு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டிவருகின்றனர். முன்பெல்லாம் மொபைல் யாரிடமாவது ஒருவரிடம் தான் இருக்கும். ஆனால் தற்போது அனைவரும் மொபைல் வைத்திருக்கின்றனர். தங்களின் திறமைகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றி அதன் மூலம் அதிகமான பார்வையார்களை பெற்று வருமானம் பெறுகின்றனர். இதனால் அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
குஜராத்தை சேர்ந்தவர் தான் புவன் பாம் இவர் குஜராத்தில் உள்ள வடோடரா பகுதியில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர். இவரை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவர் ஒரு பாடகர், பாடலாசிரியர் மற்றும் ஆக்டர் ஆவார். ஆரம்பத்தில் இவர் தன்னுடைய நகைச்சுவை வீடியோக்களை பொழுதுப்போக்கிற்காக யூடியூப்பில் பதிவேற்றி வந்தார். இவருக்கு சிறுவயதில் இருந்தே பாடகர் ஆகவேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அதனை எப்படி தொடர்வது என்று தெரியாமல் இருந்தார்.
ஆரம்பத்தில் யூடியூப்பில் நகைச்சுவை வீடியோக்களை பதிவேற்றி வந்தார். ஒரு வீடியோவில் காஷ்மீர் வெள்ளத்தில் தனது மகன் இறந்தது குறித்து பெண் நிரூபர் கேட்கும் உணர்ச்சிக்கரமான கேள்வியை கேலி செய்யும் விதமாக வீடியோ ஒன்றை பதிவு செய்திருப்பார். அந்த வீடியோ பாகிஸ்தானில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 2015 க்கு பிறகு அவர் யூடியூப்பில் பிரபலமடைந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு இவருக்கு 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் கிடைத்தனர். இதனால் இந்தியாவின் பிரபல யூடியூபர்களின் வரிசையில் (India Famous Youtuber Bhuvan Bam) இவர் இடம்பிடித்தார். ஆனால் இதற்கு முன் அவர் சிறிய சிறிய உணவகங்களில் பாட்டு பாடி பார்வையாளர்களை மகிழ்வித்து வந்தார். அந்த சமயத்தில் அவரின் ஒரு (Youtuber Bhuvan Bam’s Net Worth details in Tamil) நாள் சம்பளம் 150 ரூபாய் ஆகும். ஆனால் தற்போது அவரின் சொத்து மதிப்பு 122 கோடி (Bhuvan Bam Net Worth) என தெரியவந்துள்ளது.
தற்போது இவருக்கு அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். ஆசியாவிலேயே அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் கொண்ட தனிநபர் யூடியூபர் புவன் பாம் ஆவார். கேரி மினாட்டி -யின் (Carryminati Net Worth) நிகர இந்திய மதிப்பு சுமார் 50 கோடியாகும்.