சாப்பாடு விநியோகம் செய்யும் நிறுவனங்களில் மிகவும் பிரபலமான நிறுவனம் தான் Zomato. இந்த நிறுவனம் தங்களது பயனர்களை திருப்திப்படுத்தும் வகையில் பல புதிய சேவைகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி தான் வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய சேவையை (Zomato New Service) அறிமுகப்படுத்தியுள்ளது.
Zomato நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக லார்ஜ் ஆர்டர் ஃப்ளீட் (large order fleet) எனும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது உள்ள சேவைகள் மூலம் சிறய அளவிலான ஆர்டர்களை மட்டுமே டெலிவரி செய்ய முடிகிறது என்பதால் பெரிய அளவிலான ஆர்டர்களையும் டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக இந்த புதிய திட்டத்தினை சோமேட்டோ நிறுவனம் கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய சேவையை தொடங்குவதற்காக புதிய வடிவமைக்கப்பட்ட டெலிவரி வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவைக்காக முழுக்க முழுக்க எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த உள்ளதாகவும் இது சுற்றுச்சூழல் மாசடைவதிலிருந்து காக்கும் என்றும் அவர் கூறுப்படுகிறது. இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஃப்ளீட் வாகனம் மூலம் 50 பேருக்கான விருந்து போன்ற பெரிய ஆர்டர்களை மேற்கொள்வதற்காக இந்த சேவை தெடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவை குறித்த தகவலை சோமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபின்தர் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது, நாங்கள் இந்தியாவின் முதல் பெரிய ஆர்டர் ஃப்ளீட் (Zomato New Large Order Fleet Service) அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக இது உங்கள் அனைத்து பெரிய குழு, பார்ட்டி, வீட்டில் நடைபெறும் சிறிய நிகழ்வு ஆர்டர்களின் போது உணவு டெலிவரி செய்ய உதவியாக இருக்கும். அதேபோல் இது முழு மின்சார வாகன ஃப்ளீட் என்பதால் சுற்றுசூழல் மாசடைவது தடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: Pink Booth: பிங்க் நிற வாக்குச்சாவடிகள்..! என்ன ஸ்பெஷல் தெரியுமா? |