ஆன்மிகம்

108 அம்மன் போற்றி: அம்மனின் அருளை முழுமையாகப் பெற கூற வேண்டிய அம்மன் போற்றி..!

தெய்வ வழிபாடு என்பது நம் வாழ்வில் ஒரு முக்கிய மற்றும் இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்த இறை வழிபாட்டில் பெண் தெய்வ வழிபாடு என்பது பழங்காலம் முதலே நம் நாட்டில் இருந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக சக்தி வழிபாடு மக்களால் பின்பற்றப்படுகின்ற ஒரு தொன்மையான வழிபாட்டு முறையாகும். அதிலும் பெண் தெய்வங்கள் வழிபாடு எப்போதும் தமிழகத்தில் சிறந்த இடத்தையே பிடித்துள்ளது.

பழங்காலம் முதல் இக்காலம் வரை இந்த அம்மன் வழிபாடு தொடர்ந்து தான் வருகிறது. வழிபாடு செய்வதில் சில வேறுபாடுகள் இருந்தாலும் அது அப்படியே தான் தொடர்ந்து வருகிறது. இக்காலத்தில் பல மக்கள் கோவில்களுக்கு சென்று வணங்குவதை விரும்பினாலும் எல்லா சூழ்நிலைகளிலும் அவர்களால் கோவில்களுக்கு செல்ல முடியாமல் இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் நம் வீட்டு பூஜை அறையில் அம்மனின் இந்த 108 போற்றி ஸ்லோகத்தை(108 Amman Slokam) சொல்லி வழிபடலாம். எனவே இந்த 108 அம்மன் போற்றி ஸ்லோகத்தினை இப்பதிவில் பார்க்கலாம்.

108 அம்மன் போற்றி வரிகள் (108 Amman Potri Lines)

1ஓம் அம்மையே போற்றி
2ஓம் அம்பிகையே போற்றி
3ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
4ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
5ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
6ஓம் ஆதார சக்தியே போற்றி
7ஓம் ஆதி பராசக்தியே போற்றி
8ஓம் இருள் நீக்குபவளே போற்றி
9ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
10ஓம் இடரைக் களைவாய் போற்றி
11ஓம் இஷ்ட தேவதையே போற்றி
12ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
13ஓம் ஈடிணை இலாளே போற்றி
14ஓம் ஈகை மிக்கவளே போற்றி
15ஓம் உமையவளே தாயே போற்றி
16ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி
17ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
18ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
19ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி
20ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
21ஓம் ஏழையர் அன்னையே போற்றி
22ஓம் ஐங்கரத்தவளே போற்றி
23ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
24ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
25ஓம் ஒளடதம் ஆனவளே போற்றி
26ஓம் கவுமாரித்தாயே போற்றி
27ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி
28ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
29ஓம் காக்கும் அன்னையே போற்றி
30ஓம் கிள்ளை மொழியாளே போற்றி
31ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
32ஓம் குங்கும நாயகியே போற்றி
33ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
34ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
35ஓம் கை கொடுப்பவளே போற்றி
36ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி
37ஓம் சக்தி உமையவளே போற்றி
38ஓம் சவுந்தர நாயகியே போற்றி
39ஓம் சித்தி தருபவளே போற்றி
40ஓம் சிம்ம வாகினியே போற்றி
41ஓம் சீரெலாம் தருபவளே போற்றி
42ஓம் சீதளா தேவியே போற்றி
43ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
44ஓம் செந்தூர நாயகியே போற்றி
45ஓம் செண்பகாதேவியே போற்றி
46ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
47ஓம் சொல்லின் செல்வியே போற்றி
48ஓம் சேனைத் தலைவியே போற்றி
49ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
50ஓம் தத்துவ நாயகியே போற்றி
51ஓம் தர்ம தேவதையே போற்றி
52ஓம் தரணி காப்பாய் போற்றி
53ஓம் தத்துவ நாயகியே போற்றி
54ஓம் தர்ம தேவதையே போற்றி
55ஓம் தரணி காப்பாய் போற்றி
56ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி
57ஒம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி
58ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
59ஓம் தீமை களைபவளே போற்றி
60ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
61ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
62ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
63ஓம் தேசமுத்து மாரியே போற்றி
64ஓம் தையல் நாயகியே போற்றி
65ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
66ஓம் தோன்றாத் துணையே போற்றி
67ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
68ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி
69ஓம் நாக வடிவானவளே போற்றி
70ஓம் நாத ஆதாரமே போற்றி
71ஓம் நாகாபரணியே போற்றி
72ஓம் நானிலம் காப்பாய் போற்றி
73ஓம் நித்ய கல்யாணியே போற்றி
74ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
75ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
76ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
77ஓம் நேசம் காப்பவளே போற்றி
78ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
79ஓம் பவளவாய் கிளியே போற்றி
80ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
81ஓம் பசுபதி நாயகியே போற்றி
82ஓம் பாம்புரு ஆனாய் போற்றி
83ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
84ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
85ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
86ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
87ஓம் பீடை போக்குபவளே போற்றி
88ஓம் பீடோப ஹாரியே போற்றி
89ஓம் புத்தி அருள்வாய் போற்றி
90ஓம் புவனம் காப்பாய் போற்றி
91ஓம் பூமாரித்தாயே போற்றி
92ஓம் பூவில் உறைபவளே போற்றி
93ஓம் பூஜைக்குரியவளே போற்றி
94ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
95ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
96ஓம் மழைவளம் தருவாய் போற்றி
97ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி
98ஓம் மந்திர வடிவானவளே போற்றி
99ஓம் மழலை அருள்வாய் போற்றி
100ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
101ஓம் மாணிக்க வல்லியே போற்றி
102ஓம் மகமாயித் தாயே போற்றி
103ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
104ஓம் முத்தாலம்மையே போற்றி
105ஓம் முத்து நாயகியே போற்றி
106ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
107ஓம் வீரபாண்டி வாழ்பவளே போற்றி
108ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி
109ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி

இப்பதிவில் நாம் அம்மனை வழிபாடு செய்யும் போது கூறும் 108 போற்றிகளை பார்த்துள்ளோம் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இதையும் படியுங்கள்: இந்த ராசிகளுக்கு இனி லக் தான்..! செல்வம் வீட்டை தேடி வருமாம்..!

108 அம்மன் போற்றி – FAQ

1. 108 அம்மன் போற்றி எப்போது கூறவேண்டும்?

108 அம்மன் போற்றியை நாம் பூஐை செய்யும் வேலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூறலாம்.

2. 108 அம்மன் போற்றி மாலை வேலையில் கூறி வழிபடாலாமா?

108 அம்மன் போற்றியை நாம் மாலை வேலைகளிலும் கூறி வழிபடலாம்.

Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago