சினிமா

Ayalaan Movie Review in Tamil..!அயலான் திரைப்படத்தின் விமர்சனம்..!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திக்கேயன். இவர் பிரபலமான நடிகராகவும் உள்ளார். இவர் தமிழ் சினிமாவிற்கு பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவருடைய படங்கள் பெரியவர்களை விட சிறு குழந்தைகள் மத்தியில் தான் அதிக பிரபலம்.

இந்நிலையில் மீண்டும் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் தான் அயலான் படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படம் பல தடைகளை தாண்டி பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திக்கேயன் கதாநாயகனாகவும், கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் முழுவதும் ஏலியனை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கதைக்களம் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படம் இன்று (12,01,2024) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் விமர்சனம் (Ayalaan Movie Review) பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

அயலான் கதையின் கரு

இந்த அயலான் திரைப்படத்தின் கதை கொடைக்கானலில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தொடங்குகிறது. அங்கு ஒரு இயற்கை ஆர்வலராகவும் மிகவும் நல்ல குணம் கொண்ட ஒருவராகவும் விவசாயம் செய்தபடி வாழந்து வருகிறார் நம் கதாநாயகன் சிவகார்த்திகேயன். தன் குடும்ப கஷ்டம் மற்றும் தன் அம்மாவின் செல்லுக்காக தனகான வேலையை தேடிக்கொள்ள சென்னைக்கு வருகிறார்.

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் பூமியின் ஆழத்தில் உள்ள நோவா கேஸ், ஸ்பார்க் எனும் கனிமத்தை பூமியின் பல அடி ஆழத்துக்கு துளை போட்டு எடுக்க சென்னையைச் சேர்ந்த வில்லன் முயற்ச்சிக்கிறார். இவை இரண்டுக்கும் நடுவில் நம் பூமியை வில்லன்கள் குழுவிடமிருந்து காப்பாற்ற “ய்டூவூய்” எனும் உலகத்திலிருந்து ஒரு ஏலியன் பூமிக்கு வருகிறது. இந்த ஏலியன் தான் நம் படத்தின் கதாநாயகன்.

ஆனால் அந்த ஏலியன் தன் வேலையை முடித்தபிறகு தன் சுவடுகளை விட்டுச் செல்கிறது. மேலும் தன்னுடைய விண்கலத்தையும் வில்லன் குழுவிடம் பறிகொடுக்கிறது ஏலியன். இந்நிலையில் தான் ஏலியன் மற்றும் சிவகார்த்திக்கேயனுக்கு இடையே நட்பு உருவாகிறது.

இதன் பின்னர் அந்த வில்லன் குழுவிடமிருந்து அந்த ஏலியனின் வின்கலத்தை எப்படி மீட்பது என்றும் அந்த ஏலியன் மற்றும் சிவகார்த்திகேயனுக்கும் உள்ள தொடர்பு என்றும் அந்த ஏலியன் பூமிக்கு வந்த நோக்கம் நிறைவேறியதா என்பது தான் முழு கதை.

இதையும் படியுங்கள்: ஜோ படத்தின் திரைவிமர்சனம்..! Joe Movie Review in Tamil..!

படத்தின் சிறப்பம்சங்கள்

  • இப்படத்தில் முக்கியமாக ஏலியனின் காட்சிகள் நன்றாக அமைக்கப்பட்டுள்ளது.
  • சிவகார்த்திகேயனின் துள்ளலான நடிப்பு மற்றும் நகைச்சுவை இப்படத்திற்கு அதிக பலம் சேர்த்துள்ளது என்றே கூறலாம்.
  • மேலும் இப்படத்தில் ஹீரோவான ஏலியனுக்கு கொடுக்கப்பட்டுள்ள காட்சிகள் எதார்த்தமாகவும் அழகாகவும் உள்ளது. அது ஒரு ஏலியன் என்பதை மறந்து ரசிக்கும்படியாக உள்ளது.
  • ஏலியனுக்கு நடிகர் சித்தார்த்தின் குரல் அருமையாக பொருந்தியுள்ளது.

இயக்குநர்: R. ரவிக்குமார்

ஒளிப்பதிவாளர்: நீரவ் ஷா

இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரகுமான்

தயாரிப்பாளர்கள்: Kotapadi J. Rajesh

இப்பதிவில் நாம் Ayalaan Movie Review பற்றி பார்த்துள்ளோம். இந்த தகவல் உங்களுக்கு பயளுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Ayalaan

Director: R. Ravikumar

Date Created: 2024-01-12 22:00

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: சலார் திரைப்படத்தின் விமர்சனம்..! Salaar Movie Review in Tamil..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago