தொழில்நுட்பம்

ஹோண்டா ஸ்கூட்டர் மாடல்கள் 2024: Honda Scooter Models 2024 in Tamil..!

ஹோண்டா நிறுவனமானது ஆனது பல வகைகளில் Honda Scooter Models -ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த நிறுவனம் தான் உலகின் மிக பெரிய மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு பன்னாட்டு கூட்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பல வகையான ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளை உற்பத்தி செய்கிறது.

முன்பெல்லாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு மாட்டு வண்டிகள் நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். அதற்கு முன்பு நடந்து தான் பயணம் செய்தனர். அதன் பிறகு சைக்கிளில் பயணம் செய்தனர். சைக்கிள் வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள் என்ற நிலை கூட நமது நாட்டில் இருந்திருக்கிறது.

ஆனால் தற்போது அனைவர் வீடுகளிலும் பைக், கார் போன்ற வாகனங்கள் வாங்கும் அளவிற்கு நமது பொருளாதாரம் உயர்ந்துள்ளது. ஒரு பைக் இருந்த வீடுகளில் தற்போது ஆட்களுக்கு ஏற்றார் போல் இரண்டு மூன்று பைக்குகள் கூட ஒரு வீட்டில் இருக்கின்றது. பக்கத்து தெருவில் இருக்கும் கடைக்குச் செல்வதற்கு கூட வாகனங்களை எடுத்து செல்கிறோம். அந்த அளவிற்கு வாகனங்கள் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறிவிட்டன.

இந்த வாகனங்களில் கூட ஆண்கள் ஓட்டுவதற்கான மாடல் மற்றும் பெண்கள் ஓட்டுவதற்கான மாடல் வண்டிகள் உள்ளன. ஆண்களுக்காக பெரிய வடிவில் உள்ள பைக்குகள் வடிவமைக்கப்பட்டன, பெண்கள் ஓட்டுவதற்காக எடை குறைந்த சிறிய ஸ்கூட்டர்கள் வடிவமைக்கப்பட்டன. ஆனால் பெண்கள் ஆண்கள் ஓட்டும் பெரிய பைக்குகளை கூட தற்போது சர்வசாதாரணமாக ஓட்டுகிறார்கள. அதே போல் ஆண்களும் ஸ்கூட்டர்களை ஓட்டுகிறார்கள.

இந்த ஸ்கூட்டர்கள் அனைவருக்கும் ஓட்டுவதற்கு மிகவும் எளிமையான ஒன்று எனவே அனைவரும் Scooters வாகனத்தை பெரிதும் வாங்குவார்கள். ஹோண்டா நிறுவனமானது ஸ்கூட்டர்களையும் உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனத்தில் உறுவாக்கப்பட்ட ஹோண்டா ஸ்கூட்டர்ஸ் (Honda Scooters in Tamil) பற்றியும் அதன் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள் போன்றவற்றை இந்த பதிவில் பார்க்களாம்.

ஹோண்டா ஸ்கூட்டர் மாடல் (Honda Scooter Models)

ஸ்கூட்டர் என்பதற்கு தமிழில் குதியுந்து என்று பெயர். இந்த ஸ்கூட்டர்ஸ் ஆனது இரண்டாம் உலக போருக்கு முன்பாக ஐரோப்பா அமெரிக்க நாடுகளில் அறிமுகமானது. இது இரண்டு சக்கரங்களை கொண்ட வாகனம் ஆகும். இந்த ஸ்கூட்டர்களை பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. அவற்றில் உலகிலேயே ஆட்டோமொபைல் மற்றும் மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் ஹோண்டா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களில் (Honda Scooters Model) சிலவற்றை பற்றி பார்க்கலாம்.

1. ஹோண்டா டியோ (Honda Dio in Tamil)

ஹோண்டா டியோ ஸ்கூட்டரானது 1988 ஆம் ஆண்டு ஹோண்டா நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. ஹோண்டா டியோ ஆனது இந்தியாவில் ஹோண்டாயின் துணை நிறுவனமான எச். எம். எஸ். ஐ தயாரித்த ஸ்கூட்டர் ஆகும்.

இந்தியாலில் இந்த Honda Dio Scooter ஆனது 2002 ஆம் ஆண்டு அறிமுகம் படுத்தப்பட்டது. இது இந்தியாவில் 30 லட்சம் விற்பனையை எட்டிய ஸ்கூட்டர் ஆகும். இந்த ஹோண்டா டியோ ஸ்கூட்டர் ஆனது 55 KMPL (Kilometers per liter) வரை மைலேஜ் கொடுக்கும். இந்த ஹோண்டா டியோ 109.51 சிசி இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் விலை ரூ. 68,625 – ரூ. 97,500
ஸ்கூட்டரின் எடை 103 முதல் 105 கிலோ
ஸ்கூட்டரின் உயரம் 1.15 முதல் 1.17 மீ
ஸ்கூட்டரின் டங்கு அளவு 5.3 லிட்டர்
ஸ்கூட்டரின் வேகம் மணிக்கு 83 கி.மீ
மேலும் படிக்க: Honda Dio Models in Tamil: ஹோண்டா டியோ ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள்..!

2. ஹோண்டா ஆக்டிவா 6G (Honda Activa 6G in Tamil)

இந்தியாவில் ஸ்கூட்டர்கள் விற்பனை என்பது மிகவும் அதிகமாக உள்ளது. ஏனென்றால் நகர்புரங்களில் பயனிக்க இந்த ஸ்கூட்டர்கள் உதவியாக இருக்கும். பைக்குகளை ஒப்பிடும் போத ஸ்கூட்டர்களில் இடவசதி அதிகம் இருக்கும். இந்த ஹோண்டா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களில் ஒரு மாடல் ஆன ஹோண்டா ஆக்டிவா 6G ஆனது அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்த மாடல் ஸ்கூட்டரா 2020 ஆம் ஆண்டு ஹோண்டா நிறுவனம் அறிமுகம் படுத்தியது.

இந்த Honda Activa 6G Scooter ஆனது 60 KMPL (Kilometers per liter) வரை மைலேஜ் கொடுக்கும். இந்த பைக்கில் CBS (Combined Braking System) வசதி மற்றும் இதன் டாப் மாடல் ஸ்கூட்டியில் முன்புறம் மற்றும் பின்புறம் டிரம் பிரேக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முதல் மூன்று சர்வீஸ்கள் இலவசமாக செய்து தரப்படுகிறது.

ஹோண்டா ஆக்டிவா 6G ஸ்கூட்டரின் விலை ரூ. 70,569 – ரூ. 81,786
ஸ்கூட்டரின் எடை 106 to 107 கிலோ
ஸ்கூட்டரின் உயரம் 1156 மி.மீ
ஸ்கூட்டரின் டங்கு அளவு 5.3 லிட்டர்
ஸ்கூட்டரின் வேகம் மணிக்கு 85 கி.மீ

3. ஹோண்டா ஆக்டிவா 125 (Honda Activa 125 in Tamil)

இந்த ஹோண்டா ஆக்டிவா 125 மாடல் ஆனது இந்தியாலில் 4 வகைகளில் 5 வண்ண நிறங்களில் விற்ப்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் மாடல் ஆனது 2023 ஆம் ஆண்டு புது பொலிவுடன் அறிமுகமானது. Honda Activa 125 ஆனது 124 சிசி பிஎஸ் 6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதில் ஹெட்லைட் வசதி, அப்ரோன் மவுண்ட் இன்டிகேட்டர் வசதிகள், பாடி கலர் கவுல், பாடி கலர் பெண்டெர், கிராம் கார்னிஷ் பாடி பேனல் போன்ற வசரிகள் இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் விலை ரூ.79,657 – ரூ. 94,761
ஸ்கூட்டரின் எடை 109 கிலோ
ஸ்கூட்டரின் உயரம் 1.17 மீ
ஸ்கூட்டரின் டங்கு அளவு 5.3 லிட்டர்
ஸ்கூட்டரின் வேகம் மணிக்கு 85 கி.மீ

4. ஹோண்டா டியோ 125 (Honda Dio 125 in Tamil)

இந்த Honda Dio 125 ஸ்கூட்டர் ஆனது 2023 ஆம் ஆண்டு அறிமுகம் படுத்தப்பட்டது. இந்த மாடல் ஸ்கூட்டரானது ஹோண்டா டியோ வின் அப்டேட் வடிவம் ஆகும். இந்த ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டர் ஆனது 48 KMPL (Kilometers per liter) வரை மைலேஜ் கொடுக்கும். இந்த ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டர் ஆனது 109.5 முதல் 123.9 சிசி வரை இயக்கப்படுகிறது.

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் விலைரூ. 83,400 – ரூ.97,500
ஸ்கூட்டரின் எடை 104 to 105 கிலோ
ஸ்கூட்டரின் உயரம் 1.15 to 1.19 மீ
ஸ்கூட்டரின் டங்கு அளவு 5.3 லிட்டர்
ஸ்கூட்டரின் வேகம் மணிக்கு 83 கி.மீ

5. ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Honda Electric Scooter in Tamil)

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பது மற்ற ஸ்கூட்டர்களை காட்டிலும் வித்தியாசமானது ஆகும். இந்த ஸ்கூட்டரில் பெட்ரோல் பயன்படுத்துவதற்கு பதிலாக மின்சார பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஹோண்டா நிறுவனம் பி.சி.எக்ஸ் என்ற பெயரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மக்களுக்கு அறிமுகபடுத்தியது.

மேலும் படிக்க: Honor X9b: இந்தியாவில் விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய மாடல் Honor போன்..!

கடந்த 2018 ஆம் ஆண்டு டெல்லி நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் மின்சார ஸ்கூட்டர் ஹோண்டா நிறுவனம் முதன் முதலில் அறிமுகம் செய்தது அதன் பிறகு தான் இந்த ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. தற்போது நமது நாட்டில் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்புகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் பெட்ரோல் வாகனங்களில் இருந்து மின்சார வாகனங்களுக்கும் மக்கள் மாறி வருகின்றனர்.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி சார்ஜ் செய்வதற்கு குறைந்தது 4 மணி நேரம் ஆகும். பேட்டரி ஸ்கூட்டரில் வைத்து சார்ஜ் செய்தால் அதற்கு 6 மணி நேரம் ஆகும் என கூறப்படுகிறது.

ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலைரூ. 1,00,000 – ரூ. 1,20,000
ஸ்கூட்டரின் மோட்டார் திறன் 1000 வாட்ஸ்
ஸ்கூட்டரின் வேகம் மணிக்கு 75கி.மீ

இது போன்று Honda நிறுவனத்திடம் நிறைய ஸ்கூட்டர் மாடல்கள் (Honda Scooter in Tamil) உள்ளன. மக்களால் பெரிதும் விரும்பும் ஹோண்டா ஸ்கூட்டர் தான் ஆட்டோமொபைல் துறையில் தற்போது முதல் இடத்தில் உள்ளது. ஸ்கூட்டர் மட்டுமின்றி பைக், கார் போன்ற வாகனங்களையும் ஹோண்டா நிறுவனம் அறிமுகம்ப்படுத்தியுள்ளது. இது போன்ற ஆட்டோமொபைல் தகவல்களும் அதன் பயன்களையும் இந்த வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: ESIM Card ஆக மாறும் SIM கார்டுகள்..! ESIM மூலம் ஏற்படும் நன்மைகள் என்ன..!

Honda Scooter -FAQ

1. ஹோண்டா நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது?

ஹோண்டா நிறுவனத்தின் தலைமையகம் டோக்கியோவில் உள்ள மினாடோ என்ற நகரத்தில் உள்ளது.

2. ஹோண்டா ஸ்கூட்டர் மாடல்களில் எந்த ஸ்கூட்டி சிறந்தது?

Honda Activa 6G மிகவும் திறன் கொண்ட சிறந்த மற்றும் சிக்கனமான ஸ்கூட்டர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

3. ஹோண்டாவில் அதிக வேகம் கொண்ட ஸ்கூட்டர் எது?

Honda Activa 125 இன் அதிகபட்ச வேகம் மணிக்கு 94 கிமீ ஆகும்.

Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago