How to Make Plum cake பற்றி இப்பதிவில் பார்க்க உள்ளோம், அதற்கு முன் கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றி பார்ப்போம். கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்தவர்களால் அதிக அளவில் கொண்டாடப்பட்டாலும், அனைத்து மதத்தினரும் கொண்டாடும் பண்டிகையாக உள்ளது. இப்பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து வீட்டை எல்லாம் அலங்கரித்து வெகு விமர்சையாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இவை எல்லாம் ஒருபக்கம் இருக்க, இனிப்புகள், நமக்கு பிடித்த உணவுகள் என பலரும் பலமுறைகளில் இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஆனால் அனைவரின் இல்லத்திலும் “கேக்” இல்லாமல் கிறிஸ்துமஸ் முழுமையடையாது. அதிலும் பிளம் கேக் தான் அனைவரின் நியாபகத்திலும் வரும். இதனை பலர் பழகேக் எனவும் அழைப்பார்கள். இப்பண்டிகையின் போது Christmas Plum Cake செய்வதை விடவும், இந்த கேக்கை கடைகளில் வாங்குவது அதிகம், ஏனெனில் வேலைப்பாடு அதிகம் என்ற எண்ணம் மற்றும் நாம் செய்தால் சுவை நன்றாக இருக்காது என்ற பயம். ஆனால் பிளம் கேக் செய்வது மிகவும் சுலபம் தான். இப்பதிவில் Plum Cake Seivathu eppadi என்பதை பற்றி பார்க்கலாம்.
கேக் பேட்டர் தயாரிக்க தேவையான பொருட்கள் |
பொருட்கள் | அளவுகள் |
மைதா | 1 கப் |
சர்க்கரை | 1 கப் |
வெண்ணெய் | 1/2 கப் |
முட்டைகள் | 3 |
பேக்கிங் பவுடர் | 1 தேக்கரண்டி |
பேக்கிங் சோடா | 1/2 தேக்கரண்டி |
உப்பு | 1 பின்ச் |
வெண்ணிலா எஸ்ஸன்ஸ் | 1 டீஸ்பூன் |
உலர் பழங்கள் ஊறவைக்க |
பொருட்கள் | அளவுகள் |
கருப்பு திராட்சை | 1/2 கப் |
செர்ரி | 1/2 கப் |
டுட்டி ஃப்ரூட்டி | 1/2 கப் |
உலர் பழங்கள் | 1/2 கப் |
திராட்சை சாறு / ரம் | 1 கப் |
மசாலா செய்ய தேவையான பொருட்கள் |
பொருட்கள் | அளவுகள் |
இலவங்கப்பட்டை | 1 |
கிராம்பு | 2 |
ஏலக்காய் | 2 |
கேரமல் செய்ய தேவையான பொருட்கள் |
பொருட்கள் | அளவுகள் |
சர்க்கரை | 1/4 கப் |
தண்ணீர் | 120 ml |
கொதிக்கும் நீர் | 1/4 கப் |
மசாலா அறைக்க, 2 ஏலக்காய், 2 கிராம்பு , 2 ஜாதிக்காய், 1 பட்டை ஆகியவற்றினை சக்கரையுடன் சேர்த்து, நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
கால் கப் சர்கரையில் 120 ml தண்ணீர் சேர்த்து, கேரமல் தயார் செய்யவேண்டும். இப்போது நாம் சர்கரைக்கு பதிலாக நாட்டு சர்கரை கூட சேர்கலாம். கேரமல் தயார் ஆனதும், 1/ 4 கப் கொதிக்கும் சூடான நீரை சேர்க்கவும். இந்த கேரமல் நீர் நன்கு கொதித்தபிறகு அந்த நீரை ஆறவிடவும்.
முதலில் ஒரு அகன்ற கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும், அதில் முதலாவதாக நாம் உருக்கி வைத்துள்ள வெண்ணையை சேர்க்கவும், அதனுடம் 3 முட்டைகள், பொடித்து வைத்துள்ள சர்கரை ஆகியவற்றை நன்றாக Visk வைத்து பீட் செய்ய வேண்டும்.
அதன்பிறகு உலர்ந்த பொருட்களான, மைதா, பேக்கிங் புவுடர், பேக்கிங் சோடா போன்றவற்றை நாம் முன்பே பீட் செய்து வைத்துள்ள முட்டை, சக்கரை, வெண்ணெய் மற்றும் கேரமல் நீர் ஆகியவற்றினை இந்த கலவையுடன் சேர்த்து Cut & Fold Method-ல் மிக்ஸ் செய்யவும். அக்கலவையில் 1 பின்ச் அளவு உப்பு மற்றும் வெண்ணிலா எஸ்ஸன்ஸ் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
நாம் முன்பு செய்த கலவையில் தற்போது ஊற வைத்த உலர்ந்த பழங்களை சேர்த்து மிக்ஸ் செய்யவும். தற்போது பிளம் கேக்கிற்கான பேட்டர் ரெடி.
தற்போது இந்த கலவையை பட்டர் சீட் போடப்பட்ட ஒரு பேக்கிங் பாத்திரத்தில் சேர்க்கவும். இதனை 180 டகிரி செல்சியசிற்கு 10 நிமிடத்திற்கு Pre Heat செய்த Oven-ல் வைத்து 30 முதல் 35 நிமிடங்களுக்கு Bake செய்யவும், அதன் பிறகு டூத் பிக் அல்லது கத்தியை உள்ளே சொருகினால் ஒட்டாமல் வந்துவிட்டால், கேக் முழுமையாக தயாராகிவிட்டது என்று அர்த்தம்.
கேக் நன்றாக ஆறிய பின்னர், பேக்கிங் பாத்திரத்தில் இருந்து Demolde செய்யவும். இப்போது சுவையான Plum Cake ரெடி.
கேக் வகைகளில் மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் இருப்பது பிளம் கேக். எனவே இப்பதிவில் How to Make Plum cake பற்றி பார்க்கலாம்.
Type: Dessert
Cuisine: England
Keywords: Blum Cake, Blum Cake Recipe
Recipe Yield: 5
Preparation Time: PT30M
Cooking Time: PT45M
Total Time: PT1H15M
Recipe Ingredients:
Recipe Instructions:
Plum Cake Recipe:
மேலும் படிக்க: முந்திரி பாதாம் கட்லி செய்வது எப்படி? |
FAQ – Plum cake Recipe |
உலர் பழங்களை ஊறவைக்க நேரம் இல்லை சூழலில் அவற்றை பழசாறுடன் சேர்த்து 5 நிமிடங்கள் வரை வேகவைக்கவும், அவை முழுவதும் ஆறியபின் கேக் Batter-ல் சேர்க்கவும்.
மசாலா அறைக்க ஏலக்காய், கிராம்பு , ஜாதிக்காய், பட்டை ஆகியவற்றினை அறைக்கவேண்டும். இதனை சக்கரையுடன் சேர்த்து, அறைத்தால் நன்றாக அறைந்து பொடி ஆகும்.
அனைத்து வகையான Dry Fruits-களும் பயன்படுத்தலாம், அதில் சில முந்திரி, பாதாம், உலர் திராட்சை, பேரீச்சம்பழம் போன்ற உங்களுக்கு விருப்பமான Dry Fruits சேர்க்கலாம்.
மேலே கூறியுள்ள அதே முறையில், முட்டைக்கு பதிலாக தயிர் சேர்த்து இந்த பிளம் கேக் செய்யலாம்.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…