சினிமா

Inga Naan Thaan Kingu Trailer Release: சந்தானம் படத்தின் புது அப்டேட்..!

தமிழ் திரைத்துறையில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது வளர்ந்து வரும் கதாநாயகனாக மாறி வருபவர் தான் நடிகர் சந்தானம். அவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் நடிக்கும் படம் தான் இங்கு நான்தான் கிங்கு (Inga Naan Thaan Kingu Movie). இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகிறது என தகவல் வெளியாகி வருகிறது.

சந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் நடிக்கும் அடுத்த படம் தான் இங்கு நான் தான் கிங்கு. இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து பிரியாலயா கதாநாயகியாக நடிக்கிறார்.

இங்க நான் தான் கிங்கு திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச்செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புசெழியன் இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்குகிறார் (Inga Naan Thaan Kingu Update in Tamil).

இங்கு நான் தான் கிங்கு படம் வரும் மே 10 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று (26.04.2024) மாலை இந்த இங்கு நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் (Inga Naan Thaan Kingu Trailer Release) வெளியாக உள்ளது.

சமீபத்தில் தான் இங்கு நான் தான் கிங்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் முதல் பாடல் வெளியாகி (Santhanam Next Movie Song) அனைவரின் கவனத்தையும் பெற்றது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Uyir Thamizhukku Release Date: இயக்குனர் அமீர் நடிக்கும் உயிர் தமிழுக்கு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago