செய்திகள்

சித்திரை திருவிழா: உள்ளூர் விடுமுறையை அறிவித்தார் மதுரை மாவட்ட ஆட்சியர்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை மாத திருவிழாவிற்கு முதல் நாள் கொடியேற்றம் (ஏப்ரல்12) தொடங்கியது. இதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் அன்றைய தினம் பக்கதர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்நிலையில் கொடியேற்றம் தொடங்கி காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் நான்குமாசி வீதிகளில் வலம் வந்து ப்க்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் (Madurai Meenakshi Amman Chithirai Thiruvizha 2024) பட்டாபிஷேகம் வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும். மறுநாள் 20-ம் தேதி திக்குவிஜயமும், அடுத்த நாள் 21-ம் தேதி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், 22-ம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.

மீனாட்சி திருகல்யாணத்தின் போது காலை வெள்ளி சிம்மாசனத்தில் மற்றும் மாலை தங்க அம்பாரியுடன் யானை வாகனத்திலும் அம்மன் மாட வீதிகளில் உலா வருவாள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா உலக பிரசிதி பெற்ற திருவிழாவாகும். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் எதிர்சேவை (kallalagar Thiruvila 2024) வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி இரவும், மறுநாள் ஏப்ரல் 23 தேதி அதிகாலை அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறும். இந்த நிகழ்வை காண்பதற்கு வைகை ஆற்றின் கரைகளில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள்.

இந்த உலக பிரசிதி பெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் (alagar festival 2024 dates tamil) சேவையை தரிசிக்க மதுரைக்கு லட்சக்கணக்காண பக்தர்கள் வருவார்கள். இதனால் ஆற்றில் இறங்கும் இடத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும், தண்ணீர் பீய்ச்சி அடிக்க சில நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

எனவே தோள் பையில் நிரப்பட்ட தண்ணீரை மட்டும் தான் பீய்ச்சி அடிக்க வேண்டும் என்றும், வைகை ஆற்றில் இறங்கும் போது மட்டும் தான் தண்ணீர் அடிக்க வேண்டும். தண்ணீர் பீய்ச்சி அடிக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி முன்னதாகவே பெற வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் வித்திக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக பிரசிதி பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சேவையை (kallalagar aatril irangum nigalvu) காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் ஏப்ரல் 23-ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து உத்தரவிட்டுள்ளார் மதுரை மாட்ட ஆட்சியர் சங்கீதா. இந்த விடுமுறையை (kallalagar Thiruvila 2024 local holiday) ஈடுசெய்யும் விதமாக மே 11 தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் இது அரசு அலுவலகங்களுக்கு பொருந்தும் என குறிபிட்டுள்ளார்.

மேலும் படிக்க: Madurai Chithirai Thiruvizha: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கொடியேற்றம் தொடங்கியது..!
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago