ஆன்மிகம்

Palli Sollum Palangal: பல்லி எந்த திசையில் சத்தமிட்டால் நல்லது..!

Palli Sollum Palangal: நம் முன்னோர்கள் பல சாஸ்திரங்கள் மற்றும் சம்பிரதாயங்களை நமக்காக உருவாக்கி உள்ளனர். பல்லி பொதுவாக ஒரு ஊர்வன வகையாகும். நம் வீட்டில் பல்லி எந்த திசையில் கத்தினால் என்ன பலன் போன்றவற்றை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். ஆம் சாதாரணமாக நம் வீட்டில் பேசி கொண்டிருப்போம் அப்போது பல்லி சத்தமிட்டால் நம் வீட்டில் உள்ளவர்கள் பாருங்க பல்லியே சொல்லிடுச்சி, அப்போ நல்லது தான் என்று கூறுவார்கள். இவ்வாறாக பல்லி எந்த திசையில் கத்துகிறது, எந்த கிழமையில் கத்துகிறது (Palli Sollum Palangal in Tamil) போன்ற பலன்களை பார்க்கலாம்.

ஒரு சிலருக்கு பல்லிகளை பார்த்தால் பயம் வரும். ஆனால் பல்லிகள் சர்வசாதாரணமாக நம் வீட்டில் உலாவரும். பல்லிகள் நம் வீட்டில் இருப்பது நல்லது. நம் வீட்டில் வரும் சிறுசிறு விஷ பூச்சிகளை உண்ணும். நம் முன்னோர்கள் அவர்களின் காலத்தில் “கெளலி சாஸ்திரம்” பற்றி படித்திருக்கிறார்கள். ஒருவர் ஒரு பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷம் மற்றும் பல்லி ஒருவர் மீது விழுந்தால் அவருக்கு ஏற்படும் நல்ல மற்றும் கெட்ட காரியங்களை உணர்த்துவதற்கு கடவுள் படைத்த உயிரினம் தான் பல்லி என ஒரு நம்பிக்கை. தற்போது நாம் பல்லி எந்த திசையில் கத்தினால் (Palli Sollum Thisai Palangal in Tamil) என்ன பலன்கள் என்று பார்க்கலாம்.

பல்லி சத்தமிடும் திசைகள் மற்றும் கிழமைகள் Palli Sollum Palangal

கிழக்கு திசை

  • கிழக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் ஒருவித பயம் ஏற்படும். கிழக்கு திசையில் பல்லி கத்தினால் கெட்ட செய்திகள் வரப்போகிறது என்று அர்த்தம்.
  • ஞாயிற்றுக்கிழமை கிழக்கு திசையில் பல்லி கத்தினால் பயம்.
  • திங்கட்கிழமை பல்லி சத்திமிட்டால் லாபம் கிடைக்கும்.
  • செவ்வாய்க்கிழமை கிழக்கு திசையில் பல்லி கத்தினால் ஐஸ்வர்யம் ஏற்படும்.
  • புதன்கிழமை கிழக்கு திசையில் பல்லி கத்தினால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.
  • வியாழக்கிழமை கிழக்கு திசையில் பல்லி கத்தினால் அமங்கலம் ஏற்படும்.
  • வெள்ளிக்கிழமை கிழக்கு திசையில் பல்லி கத்தினால் நற்செய்தி வரும்.
  • சனிக்கிழமை கிழக்கு திசையில் பல்லி கத்தினால் நற் செயல்.

மேற்கு திசை

  • ஞாயிற்றுக்கிழமை மேற்கு திசையில் பல்லி கத்தினால் உறவுகளிடம் சண்டை ஏற்படும்.
  • திங்கட்கிழமை மேற்கு திசையில் பல்லி கத்தினால் நற்செயல்
  • செவ்வாய்க்கிழமை மேற்கு திசையில் பல்லி கத்தினால் அனுகூலமான நாளாகும்.
  • புதன்கிழமை மேற்கு திசையில் பல்லி கத்தினால் பயணங்கள் செல்வதற்கு வாய்ப்புண்டு
  • வியாழக்கிழமை மேற்கு திசையில் பல்லி கத்தினால் செய்கின்ற செயல்களில் நஷ்டம் ஏற்படும்.
  • வெள்ளிக்கிழமை மேற்கு திசையில் பல்லி கத்தினால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.
  • சனிக்கிழமை மேற்கு திசையில் பல்லி கத்தினால் யோகமான நாளாகும்.

வடக்கு திசை

  • பொதுவாக வடக்கு திசையில் பல்லி சத்தமிட்டால் நல்ல செய்தி வரும். நன்மைகள் உண்டாகும். இதனால் வடக்கு திசையில் பல்லி சத்திமிட்டால் எந்த பயமும் ஏற்பட தேவையில்லை.
  • ஞாயிற்றுக்கிழமை வடக்கு திசையில் பல்லி கத்தினால் செல்வம் பெருகும்.
  • திங்கட்கிழமை வடக்கு திசையில் பல்லி கத்தினால் நன்மை பெருகும்.
  • செவ்வாய்க்கிழமை வடக்கு திசையில் பல்லி கத்தினால் பகை ஏற்படும்.
  • புதன்கிழமை வடக்கு திசையில் பல்லி கத்தினால் வீட்டில் கலகம் ஏற்படும்.
  • வியாழக்கிழமை வடக்கு திசையில் பல்லி கத்தினால் நினைத்த காரியம் நடைபெறாது.
  • வெள்ளிக்கிழமை வடக்கு திசையில் பல்லி கத்தினால் கலகம் ஏற்படும்.
  • சனிக்கிழமை வடக்கு திசையில் பல்லி கத்தினால் நற்செயல் நடைபெறும்.

தெற்கு திசை

  • தெற்கு திசையில் பல்லி கத்தினால் கெட்ட செய்தி வரும். நினைத்த காரியம் நடக்காது.
  • ஞாயிற்றுக்கிழமை தெற்கு திசையில் பல்லி கத்தினால் சுகம் ஏற்படும்.
  • திங்கட்கிழமை தெற்கு திசையில் பல்லி கத்தினால் பகை உண்டாகும்.
  • செவ்வாய்க்கிழமை தெற்கு திசையில் பல்லி கத்தினால் செய்யும் செயல்களில் தோல்வி ஏற்படும்.
  • புதன்கிழமை தெற்கு திசையில் பல்லி கத்தினால் கவலை ஏற்படும்.
  • வியாழக்கிழமை தெற்கு திசையில் பல்லி கத்தினால் தன லாபம் ஏற்படும்.
  • வெள்ளிக்கிழமை தெற்கு திசையில் பல்லி கத்தினால் வரவு உண்டாகும்.
  • சனிக்கிழமை தெற்கு திசையில் பல்லி கத்தினால் பக்தி ஏற்படும்.

தென்கிழக்கு திசை

  • ஞாயிற்றுக்கிழமை பல்லி கத்தினால் தீமை உண்டாகும். எனவே கவனம் தேவை.
  • திங்கட்கிழமை பல்லி கத்தினால் காரியங்களில் கலகம் ஏற்படும்.
  • செவ்வாய்க்கிழமை பல்லி கத்தினால் நினைத்த காரியங்களில் லாபம் ஏற்படும்.
  • புதன்கிழமை பல்லி கத்தினால் தன லாபம் ஏற்படும்.
  • வியாழக்கிழமை பல்லி கத்தினால் மரியாதை ஏற்படும்.
  • வெள்ளிக்கிழமை பல்லி கத்தினால் ஆடம்பரமான செயல்கள் நிகழும்.
  • சனிக்கிழமை பல்லி கத்தினால் செல்வம் பெருகும்.

வடக்கிழக்கு திசை

  • ஞாயிற்றுக்கிழமை பல்லி கத்தினால் லாபம் ஏற்படும்.
  • திங்கட்கிழமை பல்லி கத்தினால் சுபசெய்திகள் சார்ந்த பேசுக்கள் நடைபெறும்.
  • செவ்வாய்க்கிழமை பல்லி கத்தினால் வாகனங்கள் போன்றவற்றை வாங்குவீர்கள்.
  • புதன்கிழமை பல்லி கத்தினால் நினைத்த காரியங்களில் தோல்வி ஏற்படும்.
  • வியாழக்கிழமை பல்லி கத்தினால் செய்ய நினைக்கும் காரியங்கள் நடைபெறாது.
  • வெள்ளிக்கிழமை பல்லி கத்தினால் கலகம் ஏற்படும்.
  • சனிக்கிழமை பல்லி கத்தினால் நற்செய்தி தேடிவரும்.

தென்மேற்கு திசை

  • ஞாயிற்றுக்கிழமை பல்லி கத்தினால் வரவு ஏற்படும்.
  • திங்கட்கிழமை பல்லி கத்தினால் பகை உண்டாகும்.
  • செவ்வாய்க்கிழமை பல்லி கத்தினால் பகை ஏற்படும்.
  • புதன்கிழமை பல்லி கத்தினால் கஷ்டம் ஏற்படும்.
  • வியாழக்கிழமை பல்லி கத்தினால் காரியங்களில் வெற்றி ஏற்படும்.
  • வெள்ளிக்கிழமை பல்லி கத்தினால் நற்செய்தி நடக்கும்.
  • சனிக்கிழமை பல்லி கத்தினால் யோகம் உண்டாகும்.

வடமேற்கு திசை

  • ஞாயிற்றுக்கிழமை பல்லி கத்தினால் வீட்டில் பொருள் சேரும்.
  • திங்கட்கிழமை பல்லி கத்தினால் அமங்கலம் உண்டாகும். கெட்ட செய்தி வர வாய்ப்புள்ளது.
  • செவ்வாய்க்கிழமை பல்லி கத்தினால் பிராயணங்கள் ஏற்படும்.
  • புதன்கிழமை பல்லி கத்தினால் செய்யும் செயல்களில் நஷ்டம் ஏற்படும்.
  • வியாழக்கிழமை பல்லி கத்தினால் நற்செய்தி கிடைக்கும்.
  • வெள்ளிக்கிழமை பல்லி கத்தினால் கலகம் ஏற்படும்.
  • சனிக்கிழமை பல்லி கத்தினால் திருமண யோகம் நடைபெறும்.
மேலும் படிக்க: Palli Vilum Palangal tamil: பல்லி நம் உடம்பில் எங்கு விழுந்தால் என்ன பலன்..!

நாம் இந்த பதிவில் வீட்டில் பல்லி சத்தமிட்டால் என்ன பலன்கள் (palli sollum palangal in tamil panchangam) என்று பார்த்தோம். பல்லி தொடர்ந்து கத்தினால் ஒரு சிலருக்கு பயமோ, மனக்கவலை ஏற்படும் இதனால் நீங்கள் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று விளகேற்றி வழிபடலாம்.

FAQS

1. பூஜை அறையில் பல்லி கத்தினால் என்ன பலன்கள்?

வாஸ்து சாஸ்திரபடி உங்கள் வீட்டு பூஜை அறையில் பல்லி கத்தினால் மிகவும் நல்லது. ஏனெனில் வருங்காலத்தில் தனவரவு கிடைக்கும்.

2. கிழக்கு பக்கம் பல்லி சொன்னால் என்ன பலன்?

கிழக்கு பக்கம் பல்லி கத்தினால் எதிர்பாராத கவலையை உண்டாக்கும். இது பயத்தை ஏற்படுத்தும்.

Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago