Pournami Date 2024: மாதம் முழுவதும் அமவாசை, பெளர்ணமி போன்றவைகள் வந்தாலும் அதிலும் சிறப்பு வாய்ந்ததாக சில பெளர்ணமி, அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த பெளர்ணமி, அமாவாசை நாட்களில் விரதம் இருந்து வேண்டி கொண்டால் நினைத்து நிறைவேறும் என்பது நம்பிக்கை.
முழுநிலவு, முழுமதி அல்லது பவுர்ணமி என்பது பூமியில் இருந்து பார்க்கும் போது நிலவு முழுமையான வெளிச்சத்துடன் தோற்றமளிக்கும். வானியலின்படி, சூரியன் மற்றும் நிலவிற்கு இடையே புவி வரும் நாளே முழுநிலவு அதாவது (பெளர்ணமி) ஆகும். அப்போது சூரியனின் வெளிச்சம் நிலவின் முற்பக்கத்தின் மீது முழுமையாக விழுகிறது.
நாம் அனைவரும் அமாவாசை திதி அன்று நம் முன்னோர்களுக்காக விரதம் இருப்போம். அப்படி விரதம் இருந்தால் நம் முன்னோர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்பது ஐதீகம். அதுபோல பெளர்ணமி திதியும் ஒரு விசஷே நாளாக பார்க்கப்படுகிறது. இந்த பெளர்ணமி திதியில் கிரிவலம் செல்ல உகந்த நாளாகும். எல்லா நாட்களிலிம் கிரிவலம் செல்லலாம் என்றாலும் பெளர்ணமி நாளில் கிரிவலம் செல்வது மிகவும் விசஷேசமாகும்.
நாம் இந்த பதிவில் 2024 ஆம் ஆண்டிற்கான பெளர்ணமி (Purnima Date in Tamil) தினங்களை காண்போம்.
ஆங்கில மாதம், தேதி | கிழமை | தமிழ் மாதம், தேதி | ஆரம்பிக்கும் நேரம் | முடியும் நேரம் |
ஜனவரி 25 | வியாழக்கிழமை | தை 11 | ஜனவரி 24-ம் தேதி இரவு 10.44 | ஜனவரி 25-ம் தேதி இரவு 11.56 |
பிப்ரவரி 24 | சனிக்கிழமை | மாசி 12 | பிப்ரவரி 23-ம் தேதி மாலை 04.55 | பிப்ரவரி 24-ம் தேதி மாலை 06.51 |
மார்ச் 24 | ஞாற்றுக்கிழமை | பங்குனி 11 | மார்ச் 24-ம் தேதி காலை 11.17 | மார்ச் 25-ம் தேதி பகல் 01.16 |
ஏப்ரல் 23 | செவ்வாய்கிழமை | சித்திரை 10 | ஏப்ரல் 23-ம் தேதி காலை 04.21 | ஏப்ரல் 24-ம் தேதி காலை 05.54 |
மே 23 | வியாழக்கிழமை | வைகாசி 10 (சித்ரா பெளர்ணமி) | மே 22-ம் தேதி இரவு 07.14 | மே 23-ம் தேதி இரவு 07.48 |
ஜூன் 21 | வெள்ளிக்கிழமை | ஆனி 07 | ஜூன் 21 காலை 07.45-ம் தேதி முதல் | ஜூன் 22-ம் தேதி காலை 07.19ம் |
ஜூலை 21 | ஞாற்றுக்கிழமை | ஆடி 05 | ஜூலை 20-ம் தேதி மாலை 06.10 | ஜூலை 21-ம் தேதி மாலை 04.51 |
ஆகஸ்ட் 19 | திங்கட்கிழமை | ஆவணி 03 | ஆகஸ்ட் 19-ம் தேதி அதிகாலை 03.07 | ஆகஸ்ட் 20-ம் தேதி அதிகாலை 01.09 |
செப்டம்பர் 17 | செவ்வாய்க்கிழமை | புரட்டாசி 01 | செப்டம்பர் 17-ம் தேதி காலை 11.22 | செப்டம்பர் 18-ம் தேதி காலை 09.10 |
அக்டோபர் 17 | வியாழக்கிழமை | புரட்டாசி 31 | அக்டோபர் 16-ம் தேதி இரவு 07.56 | அக்டோபர் 17-ம் தேதி மாலை 05.25 |
நவம்பர் 15 | வெள்ளிக்கிழமை | ஐப்பசி 29 | நவம்பர் 15-ம் தேதி அதிகாலை 03.53 | நவம்பர் 16-ம் தேதி அதிகாலை 03.42 |
டிசம்பர் 15 | ஞாற்றுக்கிழமை | கார்த்திகை 30 | டிசம்பர் 14-ம் தேதி மாலை 04.17 | டிசம்பர் 15-ம் தேதி மாலை 03.13 வரை |
மேலும் படிக்க: அமாவாசை 2024 ஆம் ஆண்டில் எப்போது? நாள், கிழமை, நேரம்..! |
பௌர்ணமி நாளில், பக்தர் அதிகாலையில் எழுந்து சூரியன் உதிக்கும் முன் ஒரு புனித நதியில் நீராடுகிறார். சிவபெருமானையோ அல்லது விஷ்ணுவையோ அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வழிபடலாம்.
பௌர்ணமி உடலில் நேர்மறை ஆற்றலைத் தூண்டுகிறது. பௌர்ணமி விரதத்தின் போது விரதம் இருப்பது சூரியன் மற்றும் சந்திரனின் அதிக ஈர்ப்பு விசையின் காரணமாக ஒரு பக்தருக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…