செய்திகள்

புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பு..! ரஷ்ய அதிபர் முக்கிய அறிவிப்பு..!

உலகின் மிக கொடிய நோய்களில் ஒன்றாக உள்ள நோய் தான் புற்றுநோய். இன்றளவும் இதனால் பல மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு தான் வருகின்றனர். பலர் இறந்தும் உள்ளனர். இந்த நோய்க்கு இன்றளவும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பல நாட்டை சேர்ந்தவர்களும் வருடக்கணக்கில் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தான் தற்போது ரஷ்யா இதுகுறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் தடுப்பூசிகளை (Cancer Vaccine) உருவாக்கும் பணியில் உள்ளனர். இந்நிலையல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த புற்றுநோய்க்கு (Cancer) எதிரான தடுப்பூசிகள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். இவர் மாஸ்கோ மன்றத்தில் உறையாற்றினார்.

அவர் மாஸ்கோ மன்றத்தில் பேசுகையில் புதிய தலைமுறைக்கான புற்றுநோய் தடுப்பூசிகளை (Cancer Thaduppu Oosi) உருவாக்குவதில் நாங்கள் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோம் என்றும் விரைவில் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என்றும் நான் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார். எனினும் இந்த தடுப்பூசிகள் எந்த வகையான புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் என்பது குறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மக்களை அதிக அளவில் தாக்கும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உட்பட இன்னும் பல விதமான புற்றுநோய்களை ஏற்படுத்தும் மனித பாப்பிலோமா வைரஸ்கள் (HPV) ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ்களுக்கு எதிராக 6 உரிமம் பெற்ற தடுப்பூசிகள் உள்ளன என்று கூறப்படுகிறது. மேலும் கல்லீரல் புற்றுநோயை உருவாக்கும் ஹெபடைடிஸ் பி (HBV) வைரஸ்களுக்கு எதிரான தடுப்பூசிகளும் உள்ளன.

மேலும் இதேபோல் சில வருடங்களுக்கு முன்பு உலகையே ஆட்டிப்படைத்த நோய் தான் கொரோனா வைரஸ். இந்த தொற்று பரவலின் போது ​​ரஷ்யா கோவிட் -19 வைரஸ்களுக்கு எதிராக ஸ்புட்னிக் V என்னும் தடுப்பூசியை உருவாக்கியது. மேலும் அதை பல நாடுகளுக்கு விற்பனை செய்தது.

இந்நிலையில் தான் தற்போது புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும் இந்த ஆராய்ச்சியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே இன்னும் சில காலங்களில் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Redmi Buds 5: குறைந்த விலையில் அறிமுகம்..! வெறும் 5 நிமிடம் சார்ஜ் பண்ணா போதும்..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago