சினிமா

Sabari Movie Release Date: திரைக்கு வருகிறது வரலட்சுமி படம்… சபரி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது..!

வரலட்சுமி தற்போது நடித்து வரும் படம் சபரி. இந்த படத்தை அறிமுக இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் வெளியாகும் தேதி தற்போது படக்குழுவினர் (Sabari Movie Release Date) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சபரி திரைப்படம் தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாக உள்ளது.

2012 ஆம் ஆண்டு தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. இவர் பல திரைபடங்களில் கதாநாயகியாகவும் சர்கார், சண்டகோழி 2 போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரலட்சுமி தற்போது நடித்து வரும் படம் சபரி (Varalakshmi Sabari Movie). இந்த படத்தின் இயக்குனர் அனில் கட்ஸ் ஆவார். இந்த படத்தல் வரலட்சுமியுடன் இணைந்து கணேஷ் வெங்கட்ராம், சுனைனா, பிரபு, ஷஷாங்க், மைம் கோபி, ராஜஸ்ரீ நாயர், ராகவா, பத்ரம், கிருஷ்ண தேஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

எமோஷனல் மற்றும் பல திரில்லான காட்சிகளை உள்ளடக்கிய இந்த சபரி படம் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானர் படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தை மஹா மூவீசுக்காக மகேந்திர நாத் கொண்ட்லா தயாரித்துள்ளார். மேலும் மகரிஷி கொண்ட்லா இந்த சபரி படத்தை வழங்குகிறார்.

திரில்லர் படமான சபரி படத்தில் வரலட்சுமி பல ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை (Release Date of Sabari Movie) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பின்படி இந்த சபரி திரைப்படம் வரும் மே 3 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Thangalaan Movie Release Date: தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago