சினிமா

பிரபல வெள்ளித்திரை நடிகையுடன் இணையும் ஈரமான ரோஜாவே சீரியல் திரவியம்..!

பிரபல தொலைக்காட்சித் தொடர்களில் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட தொடர்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் இரண்டு பாகங்களாக வெளியானது. இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த சீரியலில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்ப பட்டது.

இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்த சீரியலின் கதாநாயகன் மற்றும் கதாநாயகிகள் தான். அதிலும் இந்த சீரியல் தொடரில் கதாநாயகனாக நடித்த திரவியம் (Eeramana Rojave Serial Dhiraviam) மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். சில மாதங்களுக்கு முன்பு தான் நிறைவடைந்தது.

இந்த சீரியலின் இரண்டு பாகங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் திரவியம். இந்நிலையில் தற்போது இவர் புதிய சீரியல் (Dhiraviam New Serial) ஒன்றில் நடிக்கவுள்ளார். இது குறித்து அப்டேட்கள் வெளியாகி உள்ளது. இந்த சீரியலை இதற்கு முன்னர் பல சீரியல்களை இயக்கிய பிரவீன் பென்னட் தான் இயக்கவுள்ளார்.

இவர் சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, பாரதி கண்ணம்மா, மகாநதி போன்ற பல சீரியல்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் தான் தற்போது இவர் புதிய சீரியல் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த சீரியலில் நடிகர் திரவியம் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். கதாநாயகியாக (Dhiraviam New Serial Heroine) தில்லுக்கு துட்டு 2 திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதா சிவதாஸ் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொடரை குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சீரியலும் விஜய் தொலைகாட்சியில் தான் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்த சீரியலுக்கு பெயர் இன்னும் வைக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த சீரியல் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: கணவரை பிரிகிறாரா நயன்தாரா..! இன்ஸ்டாகிராமில் புதிய பதிவு..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago