தொழில்நுட்பம்

Yamaha RX 100: புதிய மாற்றங்களுடன் மீண்டும் றெக்கை கட்டி பறக்க உள்ள யமஹா RX100..!

Yamaha RX 100 New Model பற்றி இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இந்த யமஹா RX 100 பைக்கானது 90 -களில் அனைவராலும் விரும்பி வாங்கப்பட்ட பைக் ஆகும். பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல பைக்குகளை வடிவமைத்தாலும் இந்த Yamaha RX 100 Bike மீது மக்களுக்கு உள்ள பிரியத்தில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. தற்போது இந்த பைக் பல புதிய மாற்றங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

இந்தியாவில் கிளாசிக் பொருட்களுக்கு எப்போதும் மதிப்பு அதிகம். அனைவரும் பழைய பொருட்களை ஆச்சரியமாக பார்ப்பார்கள். அதற்காகவே தற்போது பழைய மாடல் கார்கள் மற்றும் பைக்குகளை பெரும்பாலானவர்கள் வாங்குவார்கள். தற்போது அறிமுகமாகும் புதிய மாடல்களில் அதிநவீன டெக்னாலஜி வசதிகள் இருக்கும். ஆனால் அவை எதுவும் இல்லாத பழைய மாடல் கார் மற்றும் பைக்குகளை பலர் விரும்பி வாங்குகிறார்கள்.

அந்த வகையில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதன் பழைய மாடல் பைக்குகள் மீண்டும் அறிமுகம் செய்து விற்பனையை அதிகரித்துள்ளன. அந்த வரிசையில் யமஹா நிறுவனம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யமஹா நிறுவனத்தின் பிரபலமான பைக்கான RX 100 -ஐ மீண்டும் இந்தியாவில் புதிய மாற்றங்களுடன் அறிமுகப்படுத்த உள்ளது. இதனை (New Model Yamaha RX 100 in Tamil) பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Yamaha RX 100 Old Model

இந்தியாவில் எத்தனையோ மாடல் பைக்குகள் வந்திருந்தாலும் பைக் பிரியர்கள் மத்தியில் மற்றும் மக்கள் மத்தியில் இன்று வரை RX 100 மீதான ஈர்ப்பு மாறவில்லை. இந்தியாவில் முதல்முதலில் 1985 ஆம் ஆண்டு இந்த யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கானது அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு சிறிது காலத்திலேயே மக்களின் பேராதரவை பெற்றது இந்த RX 100 பைக்கு. பிறகு சில காரணங்களால் 1996 ஆம் இந்த பைக் உற்பத்தியை நிறுத்தப்பட்டது. அதுவரை இது மக்களின் விருப்பத்திற்கு உரிய Bike ஆக இருந்தது.

90 களில் வந்த படங்கள் முதல் இன்றளவும் சில படங்களில் இந்த யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்களை காண முடியிறது. அந்த அளவிற்கு இந்த பைக் மக்களின் விருப்பத்திற்குரிய மாடலாக இருந்துள்ளது. இதற்கான காரணமாக என்னவென்றால் அந்த வாகனத்தில் ஏற்பபடும் பிரத்யேக சத்தமே ஆகும்.

New Model Yamaha RX 100

புதிய Yamaha RX 100 இந்தியாவில் அதிக சக்தி மற்றும் ஸ்டைலான தோற்றத்துடன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பழைய காலத்தில் யமஹா ஆர்எக்ஸ் ஆனது 2 ஸ்ட்ரோக் எஞ்சின் கொண்டது. புதிய மாடலில் 4 ஸ்ட்ரோக் எஞ்சின் கொண்டிருக்கும் என்றும், இது துணிச்சலான தோற்றம் மற்றும் கிளாசிக் பவர் சிறந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

2024 ஆம் ஆண்டில் இந்த யமஹா RX 100 பைக் சிறந்த மாற்றங்களுடன் மற்றும் சிறந்த விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கானது முந்தைய மாடலை விட அதிக இன்ஜின் சிசி (Engine CC) கொண்டதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Yamaha RX 100 Engine

தற்போது வரக்கூடிய பைக்குகள் அனைத்தும் நவீன மாற்றங்களுடன் அறிமுகம் ஆகின்றன. இதற்கு ஈடாக அதிக பவர் கொண்ட இன்ஜின் திறனுடன் புதிய யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் அறிமுகம் செய்யப்படும் என பைக் பிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். பழைய மாடல் யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கில் 100 CC இன்ஜின் இருந்தது. இது 11 PS பவரையும், 10.39 Nm இழுவிசையையும் (டார்க்கையும்) கொண்டிருந்தது. ஆனால் புதிய மாடல் யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கில் 200 CC இன்ஜின் பவர் அல்லது அதற்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Yamaha RX 100 Features

ஆட்டோமொபைலில் நிறைய போட்டிகள் உள்ளன. பல்வேறு பைக்குகள் பலவிதமான சிறப்பம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் அறிமுகம் ஆகின்றன. அதற்கு ஏற்றார் போல் புதிய மாற்றங்களுடன் பல சிறப்பம்சங்களுடன் இந்த யமஹா ஆர்எக்ஸ் 100 புதிய மாடல் அறிமுகம் வேண்டிய சூழல் உள்ளது.

இந்த ஆர்எக்ஸ் 100 பைக் பிரியர்கள் பல எதிர்பார்ப்புகளை வைத்துள்ளளனர். அலாய் வீல், டிஸ்க் பிரேக், ரெட்ரோ ஸ்டைல் டிசைன், செல்ஃப் ஸ்டார்ட் வசதி போன்ற மாறுதல்களை புதிய பைக்கில் பொறுத்தப்படும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த பைக்கில் LED லைட் அமைப்பையும், USB சார்ஜிங் போர்ட், சர்வீஸ் இண்டிகேட்டர், நேவிகேஷன் மற்றும் சில கூடுதல் DRL சுருக்கங்களையும் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இத்தகைய மாற்றங்கள் ஏற்படுவதால் இந்த புதிய யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் வரும் 2026 ஆம் ஆண்டு அறிமுகம் ஆகும் எனவும் கூறப்படுகிறது.

பழைய மாடல்களில் ஆர்எக்ஸ் 100 பைக்கில் உள்ள சஸ்பென்ஷனை புதிதாக வர உள்ள மாடலில் மேம்படுத்துதல், மேடு பள்ளங்களில் அதிக சிரமமின்றி ஓட்ட முடியும் என பைக் பிரியர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: ஹோண்டா ஸ்கூட்டர் மாடல்கள் 2024: Honda Scooter Models 2024 in Tamil..!

இந்த யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கின் பழைய மாடல் பெட்ரோல் டேங்கை பொறுத்தவரை 10 லிட்டர் வரை நிரப்பிக் கொள்ள முடியும். அதே போல் இந்த பைக்கின் வேகமானது மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்ல கூடியதாக இருந்தது. இதன் பிரத்தியேக சத்தமே இதன் சிறப்பம்சம் ஆகும்.

பலரும் இந்த பைக்கின் சத்தத்தின் மீது பிரியம் கொண்டிருந்தனர், தற்போது உள்ள புதிய பைக் கட்டுப்பாடுகளால் அந்த பழைய யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் சத்தம் இல்லாமல் புதிய மாடல் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது.

பல வருடங்களாக காத்திருக்கும் பைக் பிரியர்களுக்கு தற்போது யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கின் புதிய மாடல் மீது உள்ள பெரிய எதிர்பார்ப்பு என்னவென்றால். New Model Yamaha RX 100 Bike ஆனது பழைய கிளாசிக் மாடல் எலக்ட்ரிக் வடிவில் உள்ளதா அல்லது பெட்ரோல் பைக்காக உள்ளதா என்பதுதான். இவற்றைத் பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க: Bajaj Pulsar 125: இத்தனை சிறப்பம்சங்களா..! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே..!

1. யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் உற்பத்தி தொடங்கப்பட்ட ஆண்டு?

யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் ஆனது 1985 உற்பத்தி தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1996 இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

2. பழைய யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கின் வேகம் என்ன?

பழைய யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் ஆனது மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்ல கூடியது.

3. யமஹா பைக் உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆண்டு?

யமஹா பைக் உற்பத்தியானது கடந்த 1990 ஆம் ஆண்டு தான் இந்தியாவில் தொடங்கப்பட்டது.

Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago