செய்திகள்

சிக்கலில் மாட்டிய வில்லேஜ் குக்கிங் சேனல்..! ஏன் இப்படி செய்றீங்க..!

யூடியூபில் மிகவும் பிரபலமாக அனைவராலும் பார்க்கப்படும் சேனல் தான் வில்லேஜ் குங்கிங் சேனல். டயமண்ட் கிரியேட்டர் விருதைப் பெறும் முதல் தமிழ் YouTube சேனல் என்ற பெருமையும் இந்த சேனல் பெற்றுள்ளது. மேலும் இந்த சேனல் தற்போது வரை 2.42 கோடி subscribers- ஐ (Village Cooking Channel total subscribers in 2024) கொண்டுள்ளது. இந்த சேனலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் வில்லேஜ் குக்கிங் சேனலில் உள்ள தாத்தா பெரியதம்பியின் உடல்நலபிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வில்லேஜ் குக்கிங் சேனல் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுப்பிடிக்க தொடங்கிவிட்டது என்றே கூறலாம்.

தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில் உள்ள தலைவர்களும் தமிழ்நாட்டிற்கு வந்தனர். இந்நிலையில் பாஜக ஆதரவாளர் ஒருவர் ராகுல்காந்தியை பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தா பெரியதம்பியின் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு உதவி செய்ய வேண்டும் என நெல்லைக்கு வந்த ராகுல் காந்தியிடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். இதனால் வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்தவர்கள் மன உளைச்சலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அந்த நபர்.

மேலும் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு எங்களை( village cooking channel new issue )பயன்படுத்திவிட்டு தற்போது உதவி செய்ய மறுத்துவிட்டார் என வில்லேஜ் குக்கிங் சேனல் தெரிவித்துள்ளதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் வில்லேஜ் குக்கிங் சேனல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, இது முற்றிலும் பொய்! எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது! இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சி தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்! என்று அந்த சேனலின் அட்மின் சுப்பிரமணியன் வேலுசாமி தெரிவித்துள்ளார்.

இதுபோன்று வில்லேஜ் குக்கிங் சேனலில் பதிவிட்ட பிறகு பாஜக ஆதரவாளர்கள் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டிற்கு ராகுல் காந்தி (village cooking channel and rahul gandhi) தமிழகத்திற்கு வந்திருந்தார். அப்போது வில்லேஜ் குக்கிங் சேனலில் இருப்பவர்களுடன் சேர்ந்து சமைத்து அந்த வீடியோவை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ யூடியூப்பில் அதிகமான பார்வையாளர்களை கொண்டிருந்தது குறிப்பிடத்தகது.

மேலும் படிக்க: வில்லேஜ் குக்கிங் சேனலை பாராட்டிய பிரபல தெலுங்கு நடிகர்..!
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago