Homeசினிமா43 ஆண்டுகளை கடந்த உலக நாயகனின் திரைப்படம்: வறுமையின் நிறம் சிவப்பு...!

43 ஆண்டுகளை கடந்த உலக நாயகனின் திரைப்படம்: வறுமையின் நிறம் சிவப்பு…!

உலகநாயகன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் கமல்ஹாசன். இவர் 1954-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி பிறந்தார். இவர் 1960-ம் ஆண்டு முதன்முதலாக களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழ் திரையுலகிற்கு பல வெற்றி படங்களை அளித்துள்ளார். இவரின் திரைப்படங்களில் ஒன்றான வறுமையின் நிறம் சிவப்பு 1980-ம் அண்டு வெளியானது.

இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தினை கே. பாலசந்தர் அவர்கள் இயக்கி இருப்பார். இப்படத்தில் வறுமையே வாழ்வாகிப் போன, அன்றைய இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை பற்றியும் அதனால் ஒரு இளைஞன் படும் கஷ்டங்களை எல்லாம் தெளிவாக விளக்கும் படமாக அமைந்தது. இக்கதை டெல்லியில் படமாக்கப்பட்டு இருக்கும். இப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, பிரதாப் போத்தன், திலீப், எஸ்.வி.சேகர், பூர்ணம் விஸ்வநாதன், கிருஷ்ணாராவ் உள்ளிட்ட பலர் நடித்திருப்பர்.

இப்படத்தில், தந்தையிடம் சண்டைப் போட்டுவிட்டு டெல்லிக்குப் சென்றுவிடுகிறார். அதன் பிறகு டெல்லிக்கு போன மகன் சலூன் கடையில் வேலை பார்ப்பதைக்கண்டு அதிர்ச்சியாவார் பூர்ணம் விஸ்வநாதன். அப்போது கமல் வசனம் பேசிக்கொண்டிருப்பார், ஆனால் ஏதும் பேசாமல் முகத்திலே உணர்ச்சிகளைக் கொட்டியிருப்பார் பூர்ணம்.

இந்தப் படத்தின் முழுவதும் வலி நிறைந்த கதைகளமாக இருந்தாலும், அதனை நகைச்சுவையாக தனது ஸ்டைலில் சொல்லியிருப்பார் பாலசந்தர். இப்படத்தில் கமல் ஒரு கோபக்கார இளைஞனாக தத்ரூபமதாக நடித்திருப்பார். இந்தி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்குப் பிறகு ‘நெபோடிசம்’ என்ற வார்த்தை அதிக அளவில் பேசப்பட்டது. ஆனால் இந்தப் படத்தில் வரும் இன்டர்வியூ காட்சியில் கோபமாகத் தனது சர்டிபிகேட்டுகளை கமல் கிழித்தெறிவார், அப்போது Nepotism Down Down என்ற வார்த்தையை அவர் மூலமாகப் பயன்படுத்தி இருப்பார்.

Kamal Movie

KP.M.S.விஸ்வநாதன் இசையில் பாரதியாரின் நல்லதோர் வீணை செய்தே, தீர்த்த கரையினிலே பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்று இருக்கும், அப்பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. சிப்பி இருக்குது முத்தும் இருக்குது எனும் பாடல் தற்போதுவரை பலரின் Favourite Song-ஆக உள்ளது.

இப்படம் தமிழில் மட்டுமின்றி இந்தி மற்றம் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டது. இந்தியில் இந்தப் படத்தை கமல்ஹாசன், அனிதா ராஜ் நடிப்பில் Zara Si Zindagi என்ற பெயரில் பாலசந்தர் இயக்கி இருந்தார் பாலசந்தர். தெலுங்கில் ‘Akali Rajyaam’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டது, அங்கும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

1980-ம் ஆண்டில் இதே தேதியில் தான் வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படம் வெளியானது. இப்படம் 43 வருடங்களை கடந்தாலும், இன்றைய காலத்துக்கும் தேவையான பல செய்திகளை இப்படம் கூறியிருக்கும். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியானது, இதே நாளில் தான் பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படமும் வெளியானது இந்த 2 படங்களும் வேலையில்லா திண்டாட்டத்தை பற்றி உணர்ச்சிபூர்வமாக கூறியிருந்தன.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular