Homeசினிமாஇளையராஜா பயோபிக்: படத்திற்கு தனுஷ் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா..! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

இளையராஜா பயோபிக்: படத்திற்கு தனுஷ் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா..! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் சில வருடங்களாக தொடர்ந்து வெற்றிப்படங்கை கொடுத்து வருகிறார். இவர் நடிப்பில் இறுதியில் வெளியான கேப்டன் மில்லர் படம் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் தான் அடுத்ததாக அவர் இளையராஜா பயோபிக் (Ilayaraja Biopic) படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு தான் இப்படத்தின் கதை ஆகும். இந்த படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டுள்ளது. இந்த படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தான் தற்போது இப்படத்தின் ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலில் தனுஷ் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்பளம் (Dhanush Salary in Ilayaraja Biopic) எவ்வளவு கேட்டுள்ளார் என்பது தான். நடிகர் தனுஷ் சமீபகாலமாக நடித்துள்ள படங்களுக்கு 20 கோடி முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். அதிலும் குறிப்பாக அவர் கடைசியாக நடித்த கேப்டன் மில்லர் படத்திற்கு 25 கோடி வரை சம்பளமாக வாங்கினார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் தொடர் வெற்றி படங்கள் காரணமாக தனுஷ் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலின் படி நடிகர் தனுஷ் இனி நடிக்கும் படங்களுக்கு 50 கோடி என தனது சம்பளத்தை (Dhanush Salary) உயர்த்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் தனுஷ் தற்போது தனது 51-வது படத்தில் (Dhanush Next Movie) நடித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு பிறகு அவர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

Dhanush Salary in Ilayaraja Biopic Movie

இந்நிலையில் தான் தற்போது இவர் அடுத்ததாக நடிக்க உள்ள இளையராஜா பயோபிக் படத்திற்கு இவர் ரூபாய் 50கோடி சம்பளமாக கேட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இனி அவர் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் இதை தான் சம்பளமாக வாங்கியுள்ளார். என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. எனவே நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: இந்தியாவில் சாலையோர கடையில் டீ குடித்த பில் கேட்ஸ்..! வைரலாகும் புகைப்படம்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular