Homeசினிமாஇரண்டாவது காதல் திருமணம் செய்த அமலாபால்...வைரலாகும் புகைப்படம்..!

இரண்டாவது காதல் திருமணம் செய்த அமலாபால்…வைரலாகும் புகைப்படம்..!

நடிகை அமலாபாலுக்கும் அரவது காதலரான ஜகத் தேசாய்க்கும் கொச்சியில் கோலாகலமாக திருமணம் நடைப்பபெற்றது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமலாபாலின் திரைப்பயணம்

Amala Paul தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார், பிறகு பிரபு சாலமன் இயக்கிய Mynaa திரைப்பட்தில் கதாநாயகியாக நடித்ததின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், ஆர்யா உள்ளிட்ட தமிழ் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். கோலிவுட்டில் மட்டுமல்லாமால் டோலிவுட் என அழைக்கப்படும் தெலுங்கு சினிமாவிலும் அமலாபால் தடம் பதித்தார்.

அமலாபாலின் திருமணம்

விக்ரம் மற்றும் அமலாபால் இணைந்து நடித்த தெய்வத்திருமகள் திரைப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய் உடன் அமலாபாலுக்கு 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது, இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது. இதன் பிறகு அமலாபால் ஆடை, கடாவர் படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

Amala Paul அக்டோபர் 26 ஆம் தேதி அவரது 32 வது பிறந்தநாள் கொண்டாடிய போது, அவரது நண்பரான Jagat Desai தனது காதலை அமலாபாலிடம் தெரிவித்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அமலாபால் ஜகத் தேசாய்யின் Love Propose -ஐ ஏற்றுக்கொண்டார். இது சம்பந்தப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தலங்களில் வெளியாகி வைரல் ஆனது.

Amala Paul Marriage Photo

அமலாபாலும் ஜகத் தேசாய்யும் காதலித்து வந்தநிலையில் நேற்று நவம்பர் 5 ஆம் தேதி கேரளாவில் உள்ள கொச்சியில் Amala Paul Kalyanam மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

திருமணம் தொடர்பான புகைப்படங்களை Amala Paul Instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. புதுமண ஜோடிகளுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular