Homeசினிமாதொழிலதிபராகும் முன்னணி நடிகை ..! Nayanthara தொடங்கிய நியூ பிசினஸ்..!

தொழிலதிபராகும் முன்னணி நடிகை ..! Nayanthara தொடங்கிய நியூ பிசினஸ்..!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை Nayanthara சினிமா துறையில் மட்டும் அல்லாமல் புதிய தொழில் தொடங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழில் ‘ஐயா’ திரைப்படம் மூலம் அறிமுகம் ஆகிய நடிகை நயன்தாரா, பிறகு ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவா் தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான Jawan படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி ஆனார். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வரும் Lady Superstar Nayanthara தொழில் துறைகளிலும் தனது தடத்தை பதித்து வருகிறார்.

9ஸ்கின் (9Skin) என்ற பிராண்ட் நேமில் புதிய அழகு சாதன பொருட்களை விற்பனை செய்வதற்காக நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் தொழிலதிபர் டெய்சி மோர்கன் ஆகியோர் இணைந்து தொலிலை தொடங்கினா். 9Skin Product Launch நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா, அவரின் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் இருவரின் புகைப்படம் வெளியாகி வைரல் ஆகியது.

Nayanthara Started a new Business

9 ஸ்கின் மட்டும் அல்லாமால் FEMI9 என்ற புதிய பிராண்ட் நேமில் (Brand Name) சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் New Business -ஐ தொடங்கியுள்ளார். FEMI9 என்ற பிராண்ட் பற்றி Nayanthara நேற்று (அக். 24) அவரது Instagram பக்கத்தில் ”இந்த விஜயதசமி திருநாளில் FEMI9 எனும் புதிய பயணத்தை தொடங்குவதில் பெருமை கொள்கிறேன். சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த Femi9 ஒரு பிராண்ட் மட்டுமல்ல, இது ஒவ்வொரு பெண்ணின் வலிமை மற்றும் அழகுக்கான ஒரு அடையாளமாகும். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த முயற்சியைக் கொண்டாட என்னுடன் இணையுங்கள்! ஒருவரையொருவர் ஆதரிப்போம், இணைந்து உயர்வோம்” என்று பதிவிட்டுள்ளார். Nayanthara மற்றும் Vignesh Shivan -ன் இந்த புதிய முயற்ச்சிக்கு பல திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular