HomeசினிமாAtlee Next Movie Update: இந்த காம்போவ யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க..!

Atlee Next Movie Update: இந்த காம்போவ யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க..!

தமிழ் மற்றும் இந்தி என்று இரண்டு மொழிகளிலும் பிரபல இயக்குனராக இருப்பவர் தான் இயக்குனர் அட்லீ. இவர் தமிழில் 4 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். ஆனால் இவர் இயக்கிய நான்கு படங்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது. பாலிவுட்டில் பிரபல நடிகரான ஷாருக்கானை வைத்து இந்தியில் ஜவான் என்ற படத்தை இயக்கினார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படம் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இந்த படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. இயக்குனர் அட்லீ முதலில் குறும்படங்கள் எடுத்து அதன் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ஷங்கரிடம் உதவி இயக்குநராக இணைந்தார்.

இவர் விஜய் நடித்த நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகவும் இருந்தார். அதன் பிறகு சில வருடங்களை கழித்து ராஜா ராணி படத்தை இயக்கினார். இது இவரின் முதல் படம் ஆகும். இவரின் முதல் படமே பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படம் மௌனராகம் போல் உள்ளது என பலர் கூறினாலும் பலருக்கு இப்படம் மிகவும் பிடித்திருந்தது.

அதன் பிறகு விஜயை வைத்து தெறி படத்தை இய்க்கினார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து இரண்டு வெற்றிப்படங்களை வழங்கினார். இந்த படத்தில் வெற்றியை தொடர்ந்து விஜயை வைத்து மெர்சல், பிகில் ஆகிய வெற்றி படங்களை இயக்கினார். தொடர் வெற்றி படங்கள் காரணமாக இவர் தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனராக மாறினார்.

Atlee Next Movie Hero

இந்நிலையில் தான் ஜவான் படத்தை இயக்கினார் இந்த படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் தான் தற்போது இவரின் அடுத்தப்படம் குறித்த தகவல் (Atlee Next Movie Update) வெளியாகியுள்ளது. அதன்படி அட்லீ தனது அடுத்த படத்தின் அல்லு அர்ஜுன் (Allu Arjun) வைத்து இய்க்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: நடிகர் பார்த்திபனின் மகள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா..! வைரலாகும் குடும்ப புகைப்படம்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular