HomeசினிமாBoys Movie -ல் நடித்த நடிகர்களின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

Boys Movie -ல் நடித்த நடிகர்களின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர், என அழைக்கப்படும் Shankar அவர்கள் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி Boys Movie வெளியானது. இது இவர் இயக்கிய ஆறாவது திரைப்படம் ஆகும். பாய்ஸ் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் சித்தார்த், ஜெனிலியா, நகுல், பரத், விவேக் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். Boys படம் A.M. ரத்னம் தயாரிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் 2003-ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Boys Movie நடிகர்கள்

Boys Movie ஆனது வீட்டை எதிர்த்து காதலித்து திருமணம் செய்யும் ஹீரோ ஹீரோயின், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் நான்கு நண்பர்களின் வாழ்க்கை கதையே ஆகும். ஹீரோவாக சித்தார்த் மற்றும் ஹீரோயினாக ஜெனிலியாவும் அவர்களுக்கு உதவும் நண்பர்களாக நகுல், பரத், தமன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடித்திருந்தார்கள். மேலும் இப்படத்தில் குணசித்திர வேடத்தில் விவேக் நடித்திருந்தார்.

சித்தார்த்

சித்தார்த் முழு பெயர் சித்தார்த் சூரிய நாராயணன் என்பதாகும். இவர் தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தார். இவர் திரைத்துறைக்கு அறிமுகமான முதல் படம் பாய்ஸ். இப்படத்தில் கதாநாயகனாக நடித்தார், மேலும் இப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். பாய்ஸ் படத்தில் முன்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்த சித்தார்த்திற்கு அப்போது வயது 24 ஆகும். Boys Movie -ஐ தொடர்ந்து ஆயுத எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, அவள், சித்தா போன்ற பல படங்களில் நடித்திருந்தார். தமிழ் படங்களில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார் Siddharth. இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் திரைப்பட எழுத்தாளர் மற்றும் சிறந்த பின்னணி பாடகரும் ஆவார்.

Boys Movie Siddharth

ஜெனிலியா

ஜெனிலியா ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். Boys Movie -ல் நடிக்கும் போது 16 வயதான ஜெனிலியா ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகள் நடித்துள்ளார். Genelia தமிழில் நடிகர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ், பரத் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இவர் விஜய்யுடன் நடித்த சச்சின், ஜெயம் ரவியுடன் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம், தனுஷுடன் நடித்த உத்தமபுத்திரன் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் ஜெயம் ரவியுடன் ஜெனிலியா இணைந்து நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் குறும்புத்தனமான பெண்ணாக நடித்திருப்பார் இது அனைத்து தரப்பி மக்களையும் கவர்ந்தது.

Boys Movie Genelia

நகுலன்

நகுலன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த தேவயானியின் தம்பி ஆவார். இவர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் ஜூஜூ என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், மேலும் இப்படத்தில் ஒரு பாடலும் பாடியிருப்பார் நகுல். Boys Movie -ல் நடிக்கும் போது இவருக்கு வயது 19 ஆகும். இப்படத்தை தொடர்ந்து பல தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்தார் Nakkhul. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் சிறந்த பின்னணி பாடகரும் ஆவார்.

Boys Movie Nakul

பரத்

2003 ஆம் ஆண்டு வெளியான Boys Movie மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் பரத். பாபுகல்யானம் என்ற முதன்மை கதாபாத்திரத்தில் பாய்ஸ் படத்தில் Bharath நடித்திருந்தார், அப்போது அவருக்கு வயது 20 ஆகும். தொடர்ந்து காதல், வெயில், எம்டன் மகன் போன்ற திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

Boys Movie Bharath

எஸ். தமன்

எஸ். தமன் என அழைக்கப்படும் கண்டசாலா சாய் ஸ்ரீநிவாஸ் தமன் சிவக்குமார் ஒரு புகழ்பெற்ற இந்திய Music Composer ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இசையமைத்து வருகிறார். இவர் 2023-ஆண்டு விஜய் நடித்த வாரிசு படத்திற்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Thaman அவரது 20 வயதில் ஷங்கர் இயக்கிய Boys Movie-ல் கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Boys Movie Thaman

மணிகண்டன்

பாய்ஸ் படத்தில் ஹிரோவிற்கு உதவும் நான்கு நண்பர்களில் ஒருவரான குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மணிகண்டன். Boys படத்தில் நடிக்கும் போது இவருக்கு வயது 23 ஆகும். இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அப்படங்கள் சரியாக ஓடவில்லை எனவே இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. தற்போது வரை அவருக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

Boys Movie Manikandan

விவேக்

சின்ன கலைவாணர் மற்றும் மக்கள் கவிஞர் என அழைக்கப்பட்ட விவேக் 2003-ஆம் ஆண்டு வேளியான பாய்ஸ் படத்தில் மங்களம் என்ற குணசித்திர வேடத்தில் நடித்திருந்தார். Boys Movie-ல் நடிக்கும் போது விவேக்கின் வயது 42 ஆகும். இவர் திரைப்பட நடிகராக மட்டும் அல்லாமல் சமூக அக்கறை கொண்ட பிரபலமாகவும் இருந்தார். 17 ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு 59 -வது வயதில் மாரடைப்பு காரணமாக Vivek உயிரிழந்தார்.

Boys Movie Vivek

Boys Movie வெளியாகி 20 வருடங்கள் ஆனாலும் இப்படம் மக்கள் மத்தியில் இன்னும் நிலைத்து இருக்கிறது. இதற்கு காரணம் இப்பத்தின் கதையும், பாடலும் ஆகும். இப்படத்தில் பல சிறப்புகள் உள்ளன. அதாவது Boys படத்தின் ஒரு பாடலுக்கு 62 கேமராக்கள் பயன்படுத்த பட்டன. தமிழ் திரையுலகில் முதல் முறையாக இப்படத்தில் தான் இத்தனை கேமராக்கள் உபயோகப்படுத்தப்பட்டன, Bride Stove Lavender என்ற உலகிலேயே மிகபெரிய தோட்டத்தில் அலெ அலெ பாடல் படம்பிடிக்கப்பட்டது, மேலும் Time Slice யுக்தி மூலம் இப்படத்தில் ஒரு பாடலும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular