Homeசினிமாயாரோ யாருக்குள் இங்கு யாரோ… 17 Years of Chennai 28..!

யாரோ யாருக்குள் இங்கு யாரோ… 17 Years of Chennai 28..!

கிரிக்கெட் என்றால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் படிக்கும். இந்த கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சென்னை 28 (Chennai 600028 Movie) படம் தான். இந்த படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் ஆகின்றது.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் சென்னை 600028. இந்த படம் இயக்குனர் வெங்கட் பிரபு எழுத்து இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ஆகும். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்த Chennai 28 திரைப்படம் என்பது மந்தைவெளி பகுதியை சேர்ந்த கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் பற்றிய திரைப்படம் ஆகும். இந்த சென்னை 28 திரைப்படத்தின் கதையானது சென்னையில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடை மையமாக கொண்ட கதை ஆகும். ராயபுரம் ராக்கர்ஸ் அணியும், ஷார்க்ஸ் அணியும் பரம எதிரி கிரிக்கெட் டீம்ஸ.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் லோக்கல் மேட்ச்சில் ராயபுர ராக்கர்ஸ் அணிதான் கோப்பையை வெற்றவார்கள். ராயபுரம் ராக்கர்ஸ் அணியில் இருந்த ரகு (ஜெய் கதாபாத்திரம்) ஒரு கட்டத்தில் ஷார்க்ஸ் அணியினர் இருக்கும் ஏரியாவிற்கு குடியேறுகிறார். இதன் காரணமாக ரகு கிரிக்கெட் ஆட தாமதமாக செல்வதால் அவர் கிரிக்கெட் விளையாடுவதை ராயபுரம் ராக்கர்ஸ் அணியினர் மறுக்கின்றனர். இதனால் அந்த கிரிக்கெட் அணியில் இருந்து விலகுகிறார் ரகு.

ஷார்க்ஸ் அணியின் கேப்டன் கார்த்திக்கை அந்த டீம் பழனியின் சகோதரி செல்வி காதலிக்கிறார். அவளின் காதலை ரகு கார்த்திக்கிடம் கூறுகிறார். இதன் காரணமாக ரகுவை தவறாக நினைத்த கார்த்திக் அவருடன் நட்பு கொண்டு தனது கிரிக்கெட் டீமில் ஆட அழைத்து செல்கிறார். அதன் பிறகு நடைபெறும் லோக்கல் கிரிக்கெட் போட்டி, பழனியின் கோபம் அதனால் ஷார்க்ஸ் அணியில் ஏற்படும் பிளவு போன்றவற்றை கூறுவது தான் இந்த சென்னை 600028 படத்தின் கதை ஆகும்.

Chennai 600028 Movie in Tamil

இந்த படத்தில் ரகு என்ற கதாபாத்திரத்தில் ஜெய் நடித்திருந்தார், கார்த்திக் ஆக சிவா, சீனுவாக பிரேம்ஜி, ஜில்லு என்ற கதாபாத்திரத்தில் வைபவ், அரவிந்த் ஆக அரவிந்த் ஆகாஷ், பழனியாக நிதின் சத்யா, கோபி என்ற கதாபாத்திரமாக விஜய் வசந்த், ஏழுமலையாக அஜய் ராஜீம், செல்வியாக விஜயலட்சுமி, ஸ்வேதாவாக கிறிஸ்டியன் செடி, வர்ணனையாளராக படவா கோபி போன்ற பலர் நடிததிருந்தனர்.

இந்த படத்தில் உள்ள அனைவரும் புது முக நடிகர்கள். அவர்கள் அனைவரையும் கதாநாயகனாக கொண்டு கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை இன்றளவும் அனைத்து வயது திரைப்பட ரசிகர்களும் விரும்பி பார்ப்பார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகம் கூட கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது என்பது கூறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 21 வருடங்களை கடந்த மெளனம் பேசியதே..! இன்றும் பேசிக்கொண்டு இருக்கிறது..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular