HomeசினிமாKGF-ல் வேலை பார்க்கும் சியான் விக்ரம்… தங்கலான் படத்தின் டீசர் வெளியானது..!

KGF-ல் வேலை பார்க்கும் சியான் விக்ரம்… தங்கலான் படத்தின் டீசர் வெளியானது..!

விக்ரம் நடிப்பில் தற்போது தயாராகி வரும் படம் தங்கலான். இப்படத்தை காலா, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. தங்கலான் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ள நிலையில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

ஒவ்வொறு படத்திலும் வித்தியாசமான தோற்றத்தை காட்டும் Vikram இப்படத்தில் கே.ஜி.எஃப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தில் வேலைசெய்யும் தொழிலாளியாக நடித்துள்ளார். Thangalaan படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

Thangalaan Teaser

Thangalaan படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள கேஜிஎஃப் பகுதியில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர். இதனை அடுத்து தற்போது படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular